சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியாக விளங்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் சிறைக்கைதிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கூறியவர், `சிறைக்கைதிகளுக்கு தாம்பத்ய உரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்தப் பரிந்துரைக்கு முரண்பட்ட கருத்துகள் எழுந்ததை தொடர்ந்து, இது குறித்து விகடன் வலைதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `சிறைக்கைதிகளுக்கு தாம்பத்ய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்ற நீதிபதியின் பரிந்துரை…
* பரிசீலிக்கப்பட வேண்டியது
* நடைமுறை சிக்கல்கள் அதிகம்
* தவறான பரிந்துரை
* அவசியமானதே’
எனக் கேட்டிருந்தோம்.
மொத்தம் 1681 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `பரிசீலிக்கப்பட வேண்டியது’ என 31 சதவிகிதத்தினரும், நடைமுறை சிக்கல்கள் அதிகம்’ என 30 சதவிகிதத்தினரும், `தவறான பரிந்துரை’ என 29 சதவிகிதத்தினரும், `அவசியமானதே’ என 10 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர்.

பெரும்பாலான மக்களின் கருத்து, `சிறை கைதிகளுக்கு தாம்பத்ய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று இருந்தது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சிறைக்கைதிகள் தங்கள் இணையருடன் சிறையிலேயே பாலியல் உறவு கொள்வதற்கான நடைமுறை பஞ்சாப் மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/dr0TWml
