அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மானாமதுரை தொகுதியில் நடைப்பயணத்தில் ஈடுபட்டபோது, மண்பாண்டம் செய்வது குறித்து அறிந்துகொண்டார்.
விருதுநகரில் ஓ.பி.எஸ் தரப்பு ஆர்ப்பாட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணிக்கு, முண்டியடித்துக்கொண்ட தொண்டர்கள்.
நீலகிரி:

மலை காய்கறி மற்றும் தேயிலை விளையக்கூடிய நீலகிரியில் மாற்றி யோசித்த விவசாய சகோதரர்கள் தக்காளி பயிரிட்டு, அறுவடை செய்து வருகின்றனர். கிலோவுக்கு 80 ரூபாய் கிடைத்தால்போதும் என உள்ளுர் மக்களுக்கு விற்பனை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

விருதுநகரில் ஆடித்தபசை முன்னிட்டு நெல் கடை மைதானமண்டகப்படியில் பக்தர்களுக்கு காட்சியளித்த கோமதி அம்மன்.
ஈரோடு எல்லப்பாளையம் குளம் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
தமிழ்நாட்டில் ‘புவிசார் குறியீடு’ பெற்றிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த மட்டி வாழை.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோதைகிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ ருத்ர ஹோமம் வழிபாடு.
நாகர்கோவில் கோதைகிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சுவாமி.
பொள்ளாச்சியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை, சின்னகல்லார் வனப்பகுதியில் வலம் வருவதை வனத்துறையினர் டிரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், அழகர்கோயில் ஆடித் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொடநாடு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், அனுமதி பெறாமல் உடலில் கறுப்புமை பூசி பேரணியாக வர முயன்ற இளைஞர்கள் நான்கு பேரை, கோவை பந்தயசாலை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழாவில்
மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி தாய்ப்பால் கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
விழுப்புரம் நகராட்சியில் 50 வயதுக்கு மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை முன்னறிவிப்பின்றி நீக்கிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 50,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் காலணிகள் தயாரிக்கும் இரண்டாம் கட்டப் பணி தற்போது தொடங்கியிருக்கிறது.
திருநெல்வேலி:

வீரவநல்லூரில் தயார் செய்யப்படும் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. செடிபுட்டா சேலையுடன், சேலையை நெய்த நெசவாளர் சீதாலெட்சுமி.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கு காட்டி வரும் தி.மு.க அரசைக் கண்டித்து தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோர் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு தேனியில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஒரே மேடையில் ஏறி, தி.மு.க அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

from Tamilnadu News https://ift.tt/PYhClaN