இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், 508 ரயில்வே நிலையங்களை 24,470 கோடி செலவில் ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ எனும் திட்டம் மூலம் நவீன ரயில் நிலையங்களாக மறுவடிவமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதந்திரத்தை அடைவதற்கான இந்தியாவின் போராட்டத்தில் புதிய ஆற்றலை வெளிப்படுத்தியது. அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, நாட்டின் அனைத்து தீமைகளுக்கும் அடித்தளமான ‘இந்தியா’ வெளியேறு என இன்று நாடு முழுவதும் கூறுகிறது.

எதிர்க்கட்சிகள் தங்கள் வேலையை மற்றவர்கள் செய்யக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. இந்தியா முழுவதும் ஒரே ஒரு குரல் மட்டுமே பலமாக ஒலிக்கிறது. அது ‘இந்தியாவில் நிறைந்திருக்கும் ஊழல், வாரிசு அரசியல் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்பதுதான். ஒரு நவீன நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டினோம். நாடாளுமன்றம் நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம். அதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எதிர்த்தன. 70 ஆண்டுகளாக, நாட்டுக்காக துணிவோடு போரிட்ட ஒருவீரருக்குக்கூட போர் நினைவுச்சின்னம் கட்டவில்லை. ஆனால், நாங்கள் தேசிய போர் நினைவகத்தைக் கட்டியபோது, வெட்கமில்லாமல் அதை பகிரங்கமாக விமர்சித்தார்கள். நேர்மறையான அரசியலின் பாதையைக் கைக்கொண்டு எதிர்மறை அரசியலை வென்று நாங்கள் முன்னேறி வருகிறோம்” என எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.
from Tamilnadu News https://ift.tt/QTpXqkK
