கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இரவு அங்கு சாலைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் சிவக்குமார், பழனிசாமி, சிவாஜி, கார்த்திக் ஆகியோரை,

தாக்குதலுக்குள்ளான பணியாளர்

பொள்ளாச்சி நகராட்சி துணைத் தலைவர் கௌதம் (தி.மு.க) மற்றும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி பார் நாகராஜ் ஆகியோர் இணைந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து காவல்துறையில் சிவக்குமார் அளித்துள்ள புகாரில், “இரவு சாலை போட தயாராகிக் கொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் வந்தது. அதில் இருவர் வேலையை நிறுத்த சொன்னார்கள். எங்கள் மேஸ்திரியிடம் பேசிக் கொள்ளுங்கள்  என்று சொன்னதற்கு, கையில் வைத்திருந்த கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் எங்களை தாக்கினார்கள்.

சிகிச்சை

நாங்கள் வேண்டாம் என சொன்னதையும் கேட்காமல் குடிபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டி கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. துற்போது காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய தி.மு.க கவுன்சிலருக்கு, நகராட்சி துணைத் தலைவர் கௌதம் மிரட்டல் விடுத்த ஆடியோவும் வெளியாகியுள்ளது. இது குறித்து தி.மு.க கவுன்சிலர் பெருமாள் கூறுகையில், “நேற்று இரவு எனது வார்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. துணைத் தலைவர் அங்கு சென்று, ‘என் வார்டில் சாலையை சீரமைக்காமல்… எப்படி இங்கு வேலை செய்யலாம்’ எனக் கேட்டு பணியாளர்களை தாக்கியுள்ளார். நேற்று நடந்த நகர்மன்றக் கூட்டத்துக்கு துணைத் தலைவர் வரவில்லை. அந்தக் கூட்டத்திலேயே என் வார்டில் பணிகளை முடித்துவிட்டு, நாளை அங்கு சீரமைப்புப் பணி செய்யப்படும் எனக் கூறியிருந்தனர்.

பெருமாள்

அதற்கு நடுவில் அங்கு நடந்த அசம்பாவிதம் தொடர்பாக எனக்கு வந்த தகவலை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தேன். அதற்கு அவரை விட வயதில் மூத்த என்னை அழைத்து, தகாத வார்தைகளில் திட்டி மிரட்டுகிறார். துணைத் தலைவர் என்ற அடிப்படையில் நகர்மன்றக் கூட்டத்துக்கு வந்து அவர் தன் வார்டு பிரச்னைகளை உரிமையாக கேட்கலாம். அப்படி செய்யாமல் குடிபோதையில் இப்படி செய்வது எந்த வகையில் நியாயம்.” என்றார்.

இது குறித்து பொள்ளாச்சி நகராட்சி துணைத் தலைவர் கௌதமிடம் விளக்கம் கேட்டபோது, “பிரச்னை அதுவல்ல. இவர்கள் இரவு நேரத்தில் சாலை போட வந்தார்கள். நகராட்சி அதிகாரிகள் தரப்பில், இவர்களை இரவு நேரம் சாலை போடக் கூடாது. பகலில் சாலை போடுங்கள் எனக் கூறினார்கள். அதைக் கேட்காமல் அவர்கள் டிராக்டரை வைத்து என்மீது மோத வந்தனர். கையில் இருந்த மம்பட்டி, சுத்தியல் ஆகியவற்றுடன் எங்களை சுற்றி வளைத்தனர்.

கௌதம், பார் நாகராஜ்

அந்த வழியாகச் சென்ற பார் நாகராஜ் கூட்டமாக இருக்கிறதே என எட்டிப் பார்த்தபோது, அவனின் சட்டையைப் பிடித்தனர். இதனால் அவன் தன் சட்டையைப் பிடித்தவனை அடித்து சென்றுவிட்டான். இதற்கும், அவனுக்கும் தொடர்பில்லை. பொதுமக்கள் கூடி சத்தம் போட்டதால் காவல்துறையினர் வந்துவிட்டனர். மற்றபடி நான் யாரையும் தாக்கவில்லை. உட்கட்சிப் பிரச்னையால் இதை எங்கள் கட்சியினரே பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/1uT2MzX