ராமர் கோயில் குடமுழுக்கு விழா:

“பிரான் பிரதிஷ்டா” என்ற பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த விழா 16-ம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு நடைபெறும். இதில் பிரதமர் மோடி, ராம் லல்லா சிலைக்கு தொடக்க ஆரத்தி செய்வார் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என ஆயிரக்கனக்கானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த கோயில் போராட்டங்கள், வன்முறைகள், கலவரங்கள், சட்டப்போராட்டம் என அனைத்தையும் சந்தித்துள்ளது. 1528-ல் முகலாயப் பேரரசரின் படைத்தளபதி மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

ராமர் கோயில் திறப்பு விழா – ஆர்.எஸ்.எஸ்

1853-ல் பாபர் ஆட்சிக் காலத்தில் ராமர் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெரிய கலவரம் வெடித்ததாகவும் பதிவுகள் உள்ளன. 1894-ல் சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே ராமர், சீதா சிலைகள் வைக்கப்பட்டன. இதனால் பெரும் பிரச்னை உருவானதால் அந்த இடம் பூட்டப்பட்டது. இதற்கு இந்து, முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். பின்னர் 1959-ல் நிர்மோஹி அகாரா அமைப்பு சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.1961-ல் உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி மனுத்தாக்கல் செய்தது. 1986-ல் இந்து மதத்தினர் மட்டும் வழிபாடு நடத்த சர்ச்சைக்குரிய இடத்தை திறக்குமாறு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 1991-ல் உ.பி.யில் பாஜக தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றி, முதல்வராக கல்யாண் சிங் பதவி ஏற்றார்.

பாபர் மசூதி இடிப்பு:

1992-ல் டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் சில ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு அயோத்தியா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் பல்வேறு கோணங்களை எதிர்த்து இஸ்மாயில் பரூக்கி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றார். 1994-ல் இஸ்மாயில் பரூக்கி தாக்கல் செய்த மனுவில் மசூதி, இஸ்லாம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 2003-ல் எந்தவிதமான மதவழிபாடுகளும் நடக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2010-ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 2:1 என்ற விகிதத்தில் வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, லாம் லல்லா பிரித்து தீர்ப்பளித்தது.

2016-ல் சர்ச்சைக்குரியஇடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். 2017-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 2019-ல் ஜன.8: அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.ஏ.போப்டே, என்.வி ரமணா, யு.யு லலித், டி ஒய்சந்திசூட் ஆகிய 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது. 2019-ல் அயோத்தியில் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

என்ன ஆனார்கள்?

2019-ல் அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்ட வழங்கவும் உத்தரவிட்டது. 2020-ல் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளையை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்த கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வரும் 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. மறுபக்கம் இந்த கோவில் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற சர்ச்சையும் வெடித்து இருக்கிறது.

அத்வானி – முரளி மனோகர் ஜோஷி – ராமர் கோயில்

அத்வானி, முரளி மோகர் ஜோஷி, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா:

ராமர் கோவில் அமைப்பதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும் மசூதியை இடிக்க சதி செய்ததாக அத்வானி மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அத்வானிக்கு தற்போது 96 வயதாவதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என கூறப்படுகிறது. இதேபோல் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது சர்ச்சைக்குரிய வளாகத்திற்கு அருகில் முரளி மனோகர் ஜோஷி இருந்தார். தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்.

இவருக்கும் தற்போது 90 வயதாகிறது என்பதால் அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான உமாபாரதியும் ராம் மந்திர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். பாபர் மசூதி இடிப்பு விகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். பின்னர் கட்சியில் பிரதமர் மோடியின் வளர்ச்சிக்கு பிறகு அவர் கொஞ்சம், கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். இதேபோல் ராமர் கோயில் கட்டுவதில் சாத்வி ரிதம்பரா தீவிரமாக இருந்தார். இவர் மீதும் பாபர் மசூதி இடிப்பில் சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போதைய நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் முதலில் வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார்.

அத்வானி மற்றும் ஜோஷியுடன் கல்யாண் சிங்

கல்யாண் சிங், அசோக் சிங்ஹால், வினய் கட்டியார், பிரவீன் தொகாடியா:

கடந்த 1992-ல் உத்தர பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தார். அப்போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எனவே வேண்டுமென்றே தடுக்கவில்லை அவர் தடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பாஜக மீது ஏற்பட்ட அதிருப்தியில் ராஷ்டிரிய கிராந்தி எனும் கட்சியை உருவாக்கினார். மீண்டும் பாஜக-வுக்கே திரும்பினார். 2021-இல் தனது 89வது வயதில் காலமானார். ராம ஜென்மபூமி இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் அசோக் சிங்ஹால் பங்கு மிகவும் முக்கியமானது. 2011 வரையில் வி.ஹெச்.பி-யின் தலைவராக இருந்தார். பின்னர் ஏற்பட்ட உடலநலக் குறைவினால் 2015 காலமானார்.

ராமர் கோவில் இயக்கத்திற்காக 1984-இல் ‘பஜ்ரங் தள்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைமைப் பொறுப்பை வினய் கட்டியார் வைத்து இருந்தார். 2018ல் இருந்து கட்சியில் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல் ராமர் கோவில் அமைப்பதில் மிகவும் தீவிரம் காட்டிய தலைவர்களில் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாவுக்கும் மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது. பின்னர் பிரதமர் மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/h6b5z4J