அயோத்தியில் ராமருக்கு மிக பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா இம்மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயிலின் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக விரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ராமாயணம் தொடர்புடைய புனித தலமான ராமேஸ்வரத்தில் புனித நீராடி இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்ய உள்ளார்.

ராமாயணத்துடன் நெருக்கமான தொடர்பினை கொண்ட ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தீர்தம் எடுத்து செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கென வரும் 20-ம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தர உள்ளார். அன்று பிற்பகலில் அக்னி தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து ராமநாதசுவாமியை வழிபாடு செய்கிறார்.
அன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கும் பிரதமர், மறுநாள் காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் புனித நீராடுவதுடன், வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலிலும் வழிபாடு செய்கிறார்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையினை முன்னிட்டு நாளை 20-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்களிலும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20-ம் தேதி பகல் 12 மணி முதல் மறுநாள் பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நாளை 20-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/reRujJ9
