மத்திய பா.ஜ.க அரசு நாளை மறுநாள் (22-ம் தேதி) பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திரைத் துறையினர் எனப் பல்வேறு துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஹர்பஜன் சிங்

ஆனால், எதிர்க்கட்சிகள், “மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் முதுகெலும்பு. அரசும், மதமும் வேறுவேறு என அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணாக, மதத்தின் வெளிப்படையான அரசியலைப் பிரதிபலிக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் அதை அரசியலாக்கி அறுவடை செய்கிறது பா.ஜ.க” எனக் குறிப்பிட்டு இந்த விழாவில் கலந்துகொள்வதைப் புறக்கணித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஹர்பஜன் சிங்,“அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு யார் செல்ல வேண்டும், செல்லக்கூடாது என்பது முக்கியமல்ல. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் நிச்சயமாகத் திறப்பு விழாவுக்குச் செல்வேன்.

அயோத்தி ராமர் கோயில்

இதுவே தனி மனிதனாக கடவுளை நம்பும் எனது நிலைப்பாடு. நான் கோயில் திறப்பு விழாவுக்குச் செல்வதில் யாருக்காவது பிரச்னை என்றால் அவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். இந்த நேரத்தில் இந்த கோவில் கட்டப்படுவது நமது அதிர்ஷ்டம். எனவே நாம் அனைவரும் சென்று ராமரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/W6d9nsV