தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டார். அவர் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் முதல்வராக இருந்த 5 ஆண்டுகளிலும் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே அவரை சந்திக்க முடிந்தது. கட்சியினரை சந்திக்கவே இல்லை.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய போது இரட்டை இலை முடக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது யாரவது தேர்தல் ஆணையத்தை அனுகினால் இரட்டை இலை முடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதுள்ள சூழல்படி மீண்டும் பிரதமராக மோடி வருவார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தன்னை தன்னை சூப்பர் புரட்சி தலைவர், சூப்பர் புரட்சி தலைவி என்று நினைத்துக் கொண்டு தனித்து போட்டியிடுவோம் என்கிறார். ஒரு முறை நாடளுமன்ற தேர்தலை சந்தித்த போது ஜெயலலிதா, இந்த லேடியா – மோடியா பார்த்துவிடலாம் என்றார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி அது போல் எடப்பாடியா – மோடியா அல்லது எடப்பாடியா – ராகுலா என்று சொல்ல முடியுமா. அ.தி.மு.க தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் மட்டுமே 40 தொகுதிகளும் வெற்றி பெற முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/hnWRZVF
