அயோத்தியில் சர்ச்சை இடம் தொடர்பாக பல ஆண்டுகள் நீடித்த வழக்கில், 2019-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மோடி – அயோத்தி ராமர் கோயில்

அதன்பிறகு கட்டுமான பணிகள் தொடங்கிய அயோத்தி ராமர் கோயிலில், ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் குழந்தை ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களின் கனவு 500 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருப்பதாக பா.ஜ.க-வினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், பாபர் காலத்தில் இந்தியர்களின் இதயத்தில் ஏற்பட்ட காயம் தைக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். குஜராத்தின் ராணிப் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ராம்ஜி கோயிலில் நேற்று நடைபெற்ற புனஹ் பிரான் பிரதிஷ்டா எனும் விழாவில் பேசிய அமித் ஷா, “பிரதமர் மோடி அயோத்தியிலுள்ள ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்ததன் மூலம் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்திருக்கிறார். இந்த தருணத்துக்காகத்தான் உலகம் முழுவதுமுள்ள ராம பக்தர்கள் கடந்த 500 ஆண்டுகளாகக் காத்திருந்தார்கள்.

அமித் ஷா

பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு தற்போது தைத்திருக்கிறது. ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார். பாபர் அயோத்தியில் ராமர் கோயிலை இடித்தார். இப்போது, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு மத்தியில் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்” என்று கூறினார்.

மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன் இருந்த அரசுகள் நாட்டின் கலாசாரம், மதம், மொழிகளுக்கு மதிப்பளிக்க அஞ்சியதாக, காங்கிரஸை நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் அமித் ஷா விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/gHEsZ4x