இந்தியா கூட்டணிக்கு அடித்தளமிட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஐக்கியமானார். நிதிஷ் குமாரின் இத்தகைய முடிவால் அதிர்ச்சியடையாத காங்கிரஸ் தலைவர் கார்கே, `அவர் இவ்வாறு செய்வார் என்று முன்பே தெரியும். அவரின் விலகல் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது’ என்று கூறிவந்தார்.

நிதிஷ் குமாருடன் மோடி

அதோடு, கூட்டணியிலிருக்கும் மற்ற கட்சிகளும், நிதிஷ் குமாரின் முடிவு தவறானது என்று கூறினர். மேலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாததால்தான் இத்தகைய முடிவை நிதிஷ் குமார் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுகின்றன என்பது இன்னும் முடிவாகாததால், தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக நிதிஷ் குமார் இன்று தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கருத்துகள் வெளிப்பட்டு வரும் சூழலில், பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் இன்று பேசிய நிதிஷ் குமார், “கூட்டணிக்கு வேறு பெயரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் ஏற்கெனவே அந்தப் பெயரை (இந்தியா) இறுதி செய்துவிட்டனர்.

நிதிஷ் குமார்

நான் எவ்வளவோ முயற்சி செய்தும், ஒரு விஷயத்தைக்கூட அவர்கள் செய்யவில்லை. இன்னும்கூட, எந்தக் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப் போகின்றன என்பது முடிவாகவில்லை. அதனால்தான், அவர்களிடமிருந்து வெளியேறி, முன்பு யாரிடமிருந்தேனோ அவர்களிடம் திரும்பிவிட்டேன். பீகார் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.

ராகுல் காந்தி

முன்னதாக, பீகாரில் நேற்று நிதிஷ் குமார் அணி மாறியதைக் கிண்டலடித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “உங்கள் முதல்வரும், சில அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர். பிறகு நிகழ்ச்சி முடிந்ததும், வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த நிதிஷ் குமார், தன்னுடைய சால்வையை ஆளுநர் மாளிகையில் மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். பிறகு, ஆளுநரை நிதிஷ் குமார் சந்தித்தபோது அதிர்ச்சியடைந்த ஆளுநர், இந்த முறை இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துவிட்டீர்களே எனக் கேட்டார்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/POEHbJ8