மத்திய பா.ஜ.க அரசு 2019-ல் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA), இன்றளவும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. லோக் சபா தேர்தல் நெருங்க நெருங்க, CAA-வை அமல்படுத்தப்போகிறோம் என பா.ஜ.க கூறிவருகிறது. அதுவும், அமித் ஷா உட்பட பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்துக்குச் செல்லும்போதெல்லாம், `விரைவில் CAA-வை நடைமுறைக்குக் கொண்டுவருவோம்’ எனக் கூறிவருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புகூட, `இன்னும் ஒரு வாரத்தில் CAA அமலுக்கு வரும்’ என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாகூர் கொல்கத்தாவில் கூறியிருந்தார். இந்த நிலையில், `தமிழ்நாட்டினுள் CAA-வை கால்வைக்க விடமாட்டோம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஏழு நாள்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்த மசோதா (CAB) சட்டமானதற்கு முழுமுதற் காரணமே, நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது, கழகம். 2021-ல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் CAA நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க அரசின் நாசகார செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க-வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டினுள் CAA-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/JKSz5w3
