ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டபூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீன அதிபர் முகம்மது அபாஸ், தன்னுடைய நான்கு நாள் சீனப் பயணத்தை நிறைவு செய்தார். இரு நாட்டு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று பாரிஸில் இருநாட்டு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்காவின் முக்கிய ராணுவ ஆய்வாளரான டானியல் எல்ஸ்பர்க் (Daniel Ellsberg), தனது 92-ம் வயதில் காலமானார். இவர் வியட்நாம் போர் ரகசியங்கள் குறித்த முக்கிய ஆவணங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு காத்திருப்போருக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு சில நாள்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனுக்கு ஆப்பிரிக்க தலைவர்கள் நேற்று வருகை புரிந்தனர். இந்த நிலையில், கிவ் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான Pete Davidson, மலைப்பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தில் சிக்கினார். பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஜூலை மாதம் விசாரணையை எதிர் கொள்வார் என்று கூறப்படுகிறது.

உலகின் இரண்டு பெரிய பணக்காரர்களான எலன் மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் நேற்று பாரிஸில் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் `தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், உகாண்டா அதிகாரிகள் மீது அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

சிவில் உரிமைகள் வழக்கறிஞரான நுஸ்ரத் சவுத்ரி, அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் பெண் ஃபெடரல் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது செனட் சபையால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/ut5rAbT