ரயில் டிக்கெட்டுகள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு போட்டியாக அதானி குழுமம் இறங்கியுள்ளது.

ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஆன்லைன் பக்கத்தில் தங்களது பயணத்தைப் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி-யின் சேவைகள் தரமானதாக இல்லை என்று மக்களிடையே பரவலான பேச்சும் இருக்கிறது.

ரயில் டிக்கெட் விற்பனை

இந்நிலையில், ரயில் டிக்கெட்டுகள் விற்பனையில் அதானி குழுமம் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிரெயின்மேன் (Trainman) என்ற இணையதளத்திலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தை `ஸ்டார்க் என்டர்பிரைசஸ்’ (Stark Enterprises) எனும் நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த ஸ்டார்க் என்டர்பிரைசஸின் 100 சதவிகித பங்குகளை வாங்க அதானி குழுமும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், பரிவர்த்தனை நிதி விவரங்களைக் குறித்து தகவல்களை வெளியிடவில்லை.

கெளவுதம் அதானி

இதனால் ரயில் டிக்கெட்டுகள் விற்பனையை விரைவில் தொடங்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. `எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்’ என்பது போல ஹிண்டன்பர்க் அறிக்கையில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டும் எழுந்து நின்றுள்ளது அதானி குழுமம். ரயில் டிக்கெட் முன்பதிவில் அதானி குழுமத்தின் வருகை ஐஆர்சிடிசி-க்கு போட்டியாக அமையும் என்று கூறப்படுகிறது. 

`ரெண்டு பேரும் ஓரமாகப் போய் சண்டை போட்டுக்கங்க…’, `ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை அதிகரித்து விடாதீர்கள்’ என்பதே மக்களின் ஒருமித்த ஆதங்கமாக உள்ளது. 

from Tamilnadu News https://ift.tt/KqNQR2g