“செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டுமென்று அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்?”

“கைதான பின்பும் பதவியில் இருப்பது அர்த்தமற்றதாக இல்லையா? அமைச்சரவை கூட்டத்திலோ அல்லது அரசு நிகழ்ச்சியிலோ அவரால் கலந்துகொள்ள முடியுமா? இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக வலியுறுத்துகிறோம்.”

செந்தில் பாலாஜி

“அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில்தானே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்?”

“கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக இதெல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே? பி.டி.ஆர் கூறிய 30,000 கோடி ரூபாய் குறித்த கேள்விகளும் எழும் அல்லவா? அதனால்தான் விசாரணைக்கு தடை கேட்கிறார்கள்.”

“சரி, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம் என அ.தி.மு.க சொல்கிறது. பா.ஜ.க 25 போதும் என இலக்கு நிர்ணயிக்கிறதே?”

“மாநில கட்சிக்கு இலக்கு வானளவு இருக்கும். நாடும் நமதே நாற்பதும் என்பதுதான் காலங்காலமாக எங்கள் முழக்கம். தேசிய கட்சி அப்படி இலக்கு நிர்ணயிக்க மாட்டார்கள். அவர்களுடைய கணக்கு வேறாகத்தான் இருக்கும். அவர்கள் 25 என்று சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாங்களும் குறைத்துச்சொல்ல முடியாது.”

எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா

“ஈரோடு இடைத்தேர்தலில் இருந்தே அ.தி.மு.க-வுக்கும் அண்ணாமலைக்கும் உரசல் இருந்துகொண்டே இருக்கிறதே… என்ன காரணம்?”

“உரசல் ஒன்றுமே கிடையாது. அவரவர் கட்சியை அவரவர் வளர்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்று அண்ணாமலையை வைத்துக்கொண்டுதான் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். எந்த உரசலும் இல்லை என்பதை டெல்லியில் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்து தெளிவுபடுத்தினார்.”

“ஓ.பி.எஸ் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் வெற்றிபெற என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?”

“ஓ.பி.எஸ் இருந்தபோதும் தென் மாவட்டங்களில் தோல்வி கிடைத்துள்ளது. ஆள் இருப்பது முக்கியம் இல்லை, அடையாளமாக இருக்க வேண்டும். அந்த அடையாளத்தை அவர் இழந்துவிட்டார். அவர் இல்லாமல் இப்போது அ.தி.மு.க இப்போது சுதந்திரமாக செயல்படுகிறது.”

ஆர்.பி.உதயகுமார்

“அப்படியானால் ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வுக்கு தடையாகத்தான் இருந்தாரா?”

“ஆமாம், அதுதானே குற்றச்சாட்டு. அ.தி.மு.க பலவீனப்பட்டுப்போனதே? அதை மீட்கத்தானே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினார்?”

“சரி, கடைசிநேரத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி-யுடன் பா.ஜ.க கூட்டணி வைக்கலாம் என்றும் சொல்லப்படுகிறதே?”

“இந்த யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. இத்தகைய கற்பனைச் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்த பரப்பப்படுபவை. பா.ஜ.க தலைவர்களான அமித் ஷாவும், ஜே.பி.நட்டாவும் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.”

from Tamilnadu News https://ift.tt/4NGsEiX