மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்வராக யார் பதவி ஏற்பது என்பதில் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உத்தவ் தாக்கரேயுடன் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென தேவேந்திர பட்னாவிஸ் அதிகாலையில் அஜித்பவாருடன் சேர்ந்து பதவியேற்றுக்கொண்டார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அஜித்பவார் தங்களுடன் சேர்ந்து பதவியேற்க இருப்பது சரத் பவாருக்கு முன்கூட்டியே தெரியும் என்று பா.ஜ.க. ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அஜித்பவார் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலரின் துணையோடு பா.ஜ.க பக்கம் தாவிவிட்டதாக செய்தி வெளியானது. அது தொடர்பான விவாதம் மட்டும் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில், சரத் பவார் இது தொடர்பாக அளித்தப் பேட்டியில்,“பா.ஜ.க தலைவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் அதிகாரத்திற்காக யாருடனும் சேருவார்கள் என்பதற்கு அஜித்பவாருடன் சேர்ந்து அதிகாலையில் பதவியேற்றது சாட்சியாகும். அதை நிரூபிக்க விரும்பினேன். அது நிரூபிக்கவும் பட்டது. நான் அவர்களை சிக்கவைத்ததாககவோ அல்லது வேறு மாதிரியோ நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் அடுத்ததாக சிம்லாவுக்கு பதில் பெங்களூருவில் நடைபெறும். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தால் பிரதமர் மோடி கலக்கத்தில் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “2019ம் ஆண்டு அதிகாலையில் அரசு பதவியேற்றதில் இருந்த உண்மையை சரத் பவார் வெளிக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. தற்போது பாதியைத்தான் சொல்லி இருக்கிறார். முழு உண்மையையும் சொல்வார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக இவ்விவகாரத்தில் சரத் பவார் இரட்டை வேடம் போடுவதாக பட்னாவிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
from Tamilnadu News https://ift.tt/u9cYNHB
