நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள அரிகேசவநல்லூரில் பொியநாயகி சமேத ஸ்ரீ அாியநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.

அரிகேசவநல்லூர் கோயில் கும்பாபிஷேகம்

நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதி. அதனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், பொது சிவில் சட்டம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

பிரதமர் மோடி கூட மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ’ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டம் இருக்க முடியாது. ஒரே சட்டமாகவே இருக்க முடியும்’ என்று சொல்லியுள்ளார். அந்தச் சட்டத்தின் உண்மையைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் கூட ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன்

டெல்லி முதலமைச்சர் பொது சிவில் சட்டத்தை ஆதரித்திருக்கிறார். சரத் பவார் போன்றவர்கள் கூட நாம் இதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் இந்த சட்டம் இன்றைய காலகட்டத்துக்கு அவசியமானது. நாம் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். பொது சிவில் சட்டம் தேவை என்பதே எனது கருத்து” என்றார்.

’மாமன்னன் படம் பார்த்தீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதும் தமிழிசை சௌந்தரராஜன் கரம் குவித்தபடியே பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

from Tamilnadu News https://ift.tt/7ieDsnF