முதல்வர் கடிதம்… ஆளுநர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஜனாதிபதி?!

முதல்வர் ஸ்டாலின்
டெல்லிக்குச் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசினார். அமித் ஷாவுடன் ஆளுநர் ரவி பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டார் என்று ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், புதிய திருப்பமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 பக்க கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அதில், ஆளுநர் ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ள ஸ்டாலின், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வரின் இந்த கடிதத்தை தொடர்ந்து ஆளுநர் மீது குடியரசுத் தலைவர் திரௌபதி நடவடிக்கை எடுப்பாரா..?
இது குறித்து திமுக, பாஜக தரப்பில் என்ன வாதங்கள் முன் வைக்கப்படுகிறது..?
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
———
‘முதல்வருக்கு ஏன் ஆட்சிக் கலைப்பு பயம்..?’ – வானதி சீனிவாசன் கேள்வி
தமிழக காங். தலைவர் பதவி: முட்டி மோதும் கார்த்தி சிதம்பரம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவரை நியமிப்பதில் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூருக்கிடையே நடக்கும் மோதலால் அதகளமாகியிருக்கிறது கதர் வட்டாரம். மறுபுறம், ‘இதில் கே.எஸ்.அழகிரி தரப்பு குளிர்காய்ந்துவருகிறது’ என்கிறார்கள் சீனியர் கதர்கள்.
தன்னுடைய ஆதரவாளராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸின் தலைவராகத் தொடர்ந்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க முடியும் என நினைக்கிறார் மாணிக்கம் தாகூர். அதனால், கார்த்தி சிதம்பரம் ‘மூவ்’களை முன்கூட்டியே அறிந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறார்.
இது குறித்து இன்று வெளியான Vikatan Plus இதழில் இடம்பெற்றுள்ள சிறப்பு கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க…
“டாஸ்மாக்: 90 மி.லி மது பாக்கெட்!” – அமைச்சர் சொல்வது என்ன?

அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மாக் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது டாஸ்மாக் தொடர்பாக கூட்டத்தில் விவாதித்தது குறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ” இப்போது டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது. இது காலை 9 மணிக்கு வேலைக்குச் செல்லும் கட்டட தொழிலாளிகள் உட்பட பலருக்குச் சிரமமாக இருப்பதாக எங்களின் கவனத்துக்கு தகவல் வந்திருக்கிறது. அதற்கு என்ன மாற்று வழி என்பதை யோசித்துச் சொல்கிறோம்” என்றார்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
கையால் தள்ளப்பட்ட ரயில்; வைரலாகும் வீடியோ…

சமூக வலைதளங்களில் ஒரு ரயிலை பயணிகளும், காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் சேர்ந்து தள்ளும் வீடியோ வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்து வருபவர்கள், “இந்தியாவில் இதுதான் நிலை, ரயில்வேத்துறையின் பணிகள் இப்படித்தான் இருக்கின்றன” என்றும், “தள்ளு, தள்ளு ஐலேசா… ட்ரெய்னைத் தள்ளு ஐலேசா” எனவும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் எங்கே நடந்தது..? இது குறித்து ரயில்வே தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் என்ன..?
Ashes: கம்பேக் கொடுத்த இங்கிலாந்து; சொன்னதைச் செய்த ஸ்டோக்ஸ்!

கடந்த ஆண்டு இங்கிலாந்து BazBall முறைக்கு மாறிய பிறகு, தனக்கு வலுவான எதிரியான உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கும் வரை தொடர் வெற்றிகளையே குவித்து வந்தது.
இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெற்றது. அலையலையாய் ரசிகர் கூட்டம் குவிகின்றனர் என எழுதிக்கொண்டிருந்த இங்கிலாந்து ஊடகங்கள், இங்கிலாந்தின் இந்த இரண்டு டெஸ்ட்டின் தோல்விக்கு பிறகு கடுமையாகச் சாடினர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
IT கணக்கு தாக்கலுக்குப் பின்னர் செய்ய வேண்டியவை…

நிதி ஆண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பள தாரர்கள், தனிநபர்கள் 2023 ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
வரிக் கணக்குத் தாக்கல் செய்த பிறகு, அதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?
இந்த வார நாணயம் விகடன் இதழில் இடம் பெற்றிருக்கும் இது குறித்த சிறப்பு கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…
விந்து வெளியேறாமை… காரணங்கள், தீர்வுகள்… காமத்துக்கு மரியாதை |

அபூர்வமாக எங்கோ சில ஆண்களுக்கு மட்டுமே வரும் விந்து வராத பிரச்னையான Anejaculation பற்றி, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பேசுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
‘Mission Impossible Dead Reckoning Part 1’ – விமர்சனம்

உலகத்துக்குப் பேராபத்தை உண்டாக்கும் வில்லன், தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் போகும் ஹீரோ… பாண்ட், மிஷன் இம்பாஸிபிள் படங்களுக்கேயான அதே பழைய ஒன்லைன்தான். ஆனால், அதில் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப AI-யை வில்லனாக்கினால் அதுவே ‘மிஷன் இம்பாஸிபிள்: டெட் ரெக்கனிங் பார்ட் 1’ (Mission Impossible Dead Reckoning Part 1).
ட்ரெயினில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி ஆக்க்ஷன் பட ரசிகர்களுக்கு செம ட்ரீட். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், VFX என மொத்த டெக்னிக்கல் குழுவுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.
விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
from Tamilnadu News https://ift.tt/Kw5nHoP
