
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் உறுதியளித்திருக்கிறது. இதை அந்த நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.

பிரான்சில் காவல்துறையினரின் வன்முறைத் தாக்குதல் மற்றும் இனவெறி சார்ந்த தாக்குதலை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் மத்திய பாரிசில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.

கென்யாவில் வரி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதையடுத்து, அந்த நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சூடானில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி 22 பேர் கொல்லப்பட்டனர்.

உஸ்பெகிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஷவ்கத் மிர்சியோயேவ் மூன்றாவது முறையாகப் பதவியேற்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நேட்டோ உச்சி மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு மன்னர் சார்லஸ், ரிஷி சுனக் ஆகியோரைச் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

All My Children-ல் மூன்றாம் பாலினத்தவராக நடித்த நடிகர் Jeffrey Carlson தனது 48-வது வயதில் காலமானார்.

(Grammy) கிராமி விருது பெற்ற பியானோ கலைஞரான பீட்டர் நீரோ, தனது 89-ம் வயதில் காலமானார்.
from Tamilnadu News https://ift.tt/T3BlHbt
