“ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும், புதுச்சேரி, தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “ஆளாளுக்கு அரசியல் பேசும்போது, ஆளுநர் ஏன் அரசியல் பேசக் கூடாது?” என்று  கூறியிருந்தார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநில ஆளுநராகியிருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் பாராட்டு விழா நடந்தது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை. புத்திசாலி மனிதர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை என்று பாடிய சந்திரபாபுவே காணாமல்போனார்” என்றவர், பிறகு மேடையில் இருந்த வானதி சீனிவாசனைப் பார்த்து, “அதனால் ஒவ்வொரு அடியும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்க வேண்டும்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

வானதி, நீ அதை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வேலுமணி அண்ணனுடன் பயணிக்கிற வரை பிரச்னை இல்லை. எதிரணியில் இருந்தால் நீ காணாமல்போய்டுவ. வெற்றியாளர்கள் மட்டும்தான் நன்மை செய்ய முடியும். அவர்கள்தான் புதிய சாதனை படைக்க வாய்ப்பு உருவாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோது வருத்தம் ஏற்பட்டது. மோடி என்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், ஏற்கெனவே ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கவர்னராக இருக்கும்போது, மூன்றாவது நபராக என்னையும் கவர்னராக்கியிருப்பார்ர்.  அப்போது வெற்றி பெற்றிருந்தால், அவருடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி நம் மண்ணுக்கு மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என வருந்தினேன்.

பிரதமர் மோடி

எனக்கு வேலுமணி அண்ணன், பொங்கலூர் பழனிசாமி, செந்தில் பாலாஜி எல்லாரும் ஒன்றுதான். பிரச்னை இல்லை.  நம்முடைய பகுதி முன்னேற வேண்டும் என்பதுதான் என் நோக்கம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/QskZ4Pt