“ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நபர் பிரதமர் மோடி; அதனால் பா.ஜ.க-வில் இணைகிறேன்’ என்று சொன்னீர்கள். இப்போதும் அது பொருந்துமே?”
“இன்றைக்கும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ஜ.க தேசிய அளவில் மக்கள் பணியாற்றுகிறது. அ.தி.மு.க மாநில அளவில் மக்கள் பணியாற்றுகிறது. இரண்டு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிறார்கள்.”

“மக்கள் பணியாற்றுவதுதான் நோக்கம் என்றால், அ.தி.மு.க-வைவிட பெரிய கட்சி பா.ஜ.க., தேசிய அளவில் அங்கு பணியாற்றலாமே… அதற்காக ஏன் கட்சி மாற வேண்டும்?”
“நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், தேசிய கொள்கைகளுக்கும் மாநிலக் கொள்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு, தேவையான திட்டங்களை மாநில அரசால்தான் செய்ய முடியும். இங்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு அ.தி.மு.க-வுக்குதான் இருக்கிறது.”
“ஏன் பா.ஜ.க அரசால் தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்க முடியாதா?”
“ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மத்திய அரசால் திட்டங்களைக் கொடுத்துவிட முடியாது. அவர்கள் இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான பணிகளைச் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் இந்த மாநிலத்துக்கு என்று ஓர் அரசு இருந்தால்தான் நமக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். அது அம்மாவின் அரசாக இருக்க வேண்டுமென்பது என் விருப்பம்.”

“நீங்கள் பா.ஜ.க-வில் இணையும் சமயத்தில், அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை சர்ச்சை ஓடிக்கொண்டிருந்தது. அந்த குழப்பத்தால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலக நேரிட்டதா?”
“கண்டிப்பாக அப்படியான சூழ்நிலையும் இருந்தது. இரட்டைத் தலைமை, கோஷ்டிப்பூசல் போன்ற காரணங்களால்தான் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிட்டது. இப்போது அ.தி.மு.க ஒரு குடையின் கீழ் இருக்கிறது. இனி எப்போதும் அப்படியொரு சூழல் உருவாகக் கூடாது.”
“அண்ணாமலைக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே ஏற்கெனவே பல சச்சரவுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் சிலர் கட்சித் தாவுவது கூட்டணியை பாதிக்காதா?”
“அதனால் எந்தச் சச்சரவும் ஏற்படாது. அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசியாகத்தான் நான் பா.ஜ.க-வுக்கே போனேன். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க-வுக்குப் போய் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில்தான் அங்கு போனேன். இப்போது மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருப்பதால், திரும்ப வந்துவிட்டேன்.”

“சரி, அ.தி.மு.க-வுக்குப் போகாமல், இங்கேயே இருந்திருக்கலாமே என பா.ஜ.க-வினர் யாரும் கேட்கவில்லையா?”
“இல்லை, யாரும் கேட்கவில்லை. எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டுமென்றுதான் எல்லோரும் சொன்னார்கள்.”
from Tamilnadu News https://ift.tt/OxjaGFA
