பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ கடவுள் என் முன்னால் வந்து எனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டால் அவரிடம் இரண்டு வரங்களை கேட்பேன். ஒன்று, ஒரு சொட்டு மதுக் கூட இல்லாத தமிழகம் வேண்டும் மற்றொன்று ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் கலக்கக்கூடாது என கேட்பேன்” என்று பேசியுள்ளார்.

Ramadoss

இவர் கூறியதுபோல் நடக்க சாத்தியம் உள்ளதா என அறிந்துக்கொள்ள சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர், ஜனகராஜனிடம் பேசினோம் “ மழைநீர் கடலில் கலக்ககூடாது என்பது இயற்கைக்கு எதிரானது. நிச்சயமாக மனிதர்களின் தேவைக்கு போக அதாவது ஏரி மற்றும் குளங்களில் சேமித்துவைக்கப்பட்ட பின்னர் மீதமுள்ள உபரி மழை நீர் நிச்சயமாக கடலுக்கு சென்றடைய வேண்டும். அப்படி செல்லும் மழைநீர் கடலின் கரையிலிருந்து முதல் இரண்டு மூன்று கிலோ மீட்டர்களுக்கு கலப்பதால் அதில் உப்புதன்மை குறைவாக உள்ளது.

இதனால் மீன்கள் அதிகமாக முட்டையிட இந்த பகுதி உதவி செய்கிறது. அதேபோல் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்கும் சிறு மீனவர்களும் இதனால் பயடைவார்கள். ஒருவேளை மழை நீர் கடலில் கலக்கவில்லையெனில் மீன்கள் உற்பத்தி குறையும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

சென்னையில் இருக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றிவிட்டு வடிக்கட்டப்பட்ட மீதமுள்ள அதிக உப்புக் கலந்த நீர் மீண்டும் கடலில்தான் போய் கலக்கிறது இதனால் கடலின் தன்மை இன்னும் அதிகமாக கெட்டுவிடும்.

ஜனகராஜன்

அதேபோல் சுற்றுசூழலுக்கு வந்தால் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள் சாக்கடை கழிவுகளாவும் குப்பைமேடுகளாகவும் உள்ளன. எனவே இந்த அசுத்த நீர்தான் கடலில் அதிகமாக கலக்கிறது. இதனால் கரையை ஒட்டியுள்ள பகுதி அதிகமாக பாதிக்கப்படும், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் பண்டைக்காலத்தில் ஏரி மற்றும் குளங்களில் மழை நீரை சேமித்து மக்கள் பயன்படுத்தினார்கள். தற்போது முறையான இடைவெளியில் ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நீரை சேமித்து வைத்தால் வருங்காலத்தில் தமிழக மக்கள் தேவையான நீரை பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 39,000 ஏரிகள் இருப்பதாக கூறுகிறார்கள் அதை முறையாக பராமரிக்காததால்தான் அதிகளவு தண்ணீர் கடலில் கலக்கிறது. ஏரிகள் இல்லாத ஜப்பான் போன்ற நாடுகள் நிலத்துக்கு அடியில் பெரிய குழாய்கள் மூலம் மழைநீரை சேமித்து உபயோகிக்கிறார்கள். ஆனால் நமக்கு பூமிக்கு மேலே அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஏரியை நாம் பாதுக்காப்பதில்லை. எனவே மழை நீர் நிச்சயமாக கடலில் கலக்க வேண்டும் அதே சமயம் மக்களுக்கு தேவையான நீரையும் சேமிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

குளத்தில் கலக்கும் கழிவுநீர்

மழைநீர் கடலில் கலப்பதால் பல நன்மைகள் உருவாகின்றன. அது கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது என்கின்றனர் கடல் ஆய்வாளர்கள். மனிதர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், போகிற போக்கில் இந்தப் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்க வேண்டும். மற்ற உயிரினங்களைப் பற்றி கவலை படாமல் மருத்துவர் ராமதாஸ் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. உயிர்களின் மதிப்பை அறிந்த மருத்துவர், அதுவும் ஒரு கட்சியின் தலைவர் இப்படி பேசியிருப்பது சூழல் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamilnadu News https://ift.tt/klvgOjP