
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித் திருக்கல்யாண உற்சவத்தின் 9 -ம் நாள், ஸ்ரீ பர்வத வர்த்தினி அம்பாளுடன் கூடிய தேரோட்டம் நடந்தது.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்தது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பழனி, விவசாயிகளுக்கு பருவத்தில் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


மணிப்பூரில் சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்கக் கோரி, தங்கச்சி மடத்தில் கண்டனப் பேரணி நடந்தது.

அண்ணாசாலையில் மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பான விண்ணப்பம் படிவம் பெறுவது குறித்த முன்னோட்டப் பயிற்சியை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர்.

ஆதிதிராவிடர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், `தொட்டுவிடும் தூரத்தில் இலக்கு’ எனும் உயர்கல்வி பயில்வதற்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.

ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மான்கள் சரணாலயப் பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக், பீங்கான் கழிவுப் பொருள்கள்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்து, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் உயர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களவாடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி, அவரது உருவ ச்சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்.

அருப்புக்கோட்டை அருகே வைப்பாறில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறை, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ அறுவை சிகிச்சையில் பயனடைந்த குழந்தைகள் முதல்வர் ரங்கசமியைச் சந்தித்து, நன்றி கூறினர்.

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசைக் கண்டித்தும், பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் “ஃபெத்தே டி புதுச்சேரி” கலைவிழா நடத்துவது தெடர்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் நடந்தது.

சட்டப்பேரவை வளாகத்தில் வேருடன் சாய்ந்த 40 ஆண்டுகள் பழைமையான மரத்தை அப்புறப்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார்.

நாகர்கோவில் நகர் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமான முக்கடல் அணைக்கட்டில், போதிய மழை பெய்யாததால் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது.

வருசநாடு மூல வைகைப் பகுதியில் மழை பொழிவு குறைந்ததால், வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்திருக்கிறது.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று, சமதர்மபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயிலில் புல்லட் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மசினகுடி பகுதியில் பூத்த தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று திருநகர் காலனி, முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அருள்மிகு சங்கரநயினார் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழாவுக்காக கோமதி அம்பாள் சன்னிதி முன்பு அமைந்திருக்கும் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
from Tamilnadu News https://ift.tt/6xyKmYb
