மணிப்பூர்: பாலியல் வன்கொடுமையில் இன்னொரு துயரம்!

மணிப்பூர் பெண்கள்

ணிப்பூரில் மே 4-ம் தேதியன்று குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு, நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம், நேற்று முன்தினம் வீடியோவாக வெளியாகி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி, மனிதத்தை எரித்துக்கொண்டிருக்கிறது.

வீடியோ பரவி பிரச்னை வெடித்த பிறகு, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் நான்கு பேரைக் கைதுசெய்துவிட்டதாகக் கூறும் மணிப்பூர் காவல்துறை, “இரண்டு மாதங்களாக ஆதாரம் கிடைக்காததால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறுகிறது.

இந்த நிலையில், இந்த வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஒருவர், “நான் நாட்டைக் காத்தேன்… ஆனால் என் குடும்பத்தைக் காக்க முடியவில்லையே” என கூறியிருப்பது சம்பவத்தின் துயரத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

இது குறித்த விரிவான தகவலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

இனியாவது மணிப்பூரைக் காப்பாரா மோடி.?!

மோடி

‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் கலைப்பாரா?’ என்ற கேள்வி கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவெங்கும் எதிரொலித்தது.

வெறிபிடித்த ஒரு கும்பலால் ‘மணிப்பூர் மகள்கள்’ நிர்வாணமாக ரோட்டில் இழுத்துவரப்பட்ட வீடியோ வெளியான பிறகு, அதைக் கண்டு ஒட்டுமொத்த தேசமும் கொந்தளித்த பிறகு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகு… இவ்வளவு ‘பிறகு’ களுக்குப் பிறகுதான், தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார் பிரதமர் மோடி.

இனியாவது மணிப்பூரை பிரதமர் காப்பாற்றுவாரா என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுப்பப்படும் நிலையில், இது குறித்த விரிவான அலசலை படிக்க இங்கே க்ளிக் செய்க…

பொன்முடி… ED குற்றச்சாட்டுகளின் தீவிரம் என்ன?!

பொன்முடி

மைச்சர் பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக்.

இந்த நிலையில், பொன்முடி மற்றும் அவரின் மகன் கெளதம சிகாமணி மீதான குற்றச்சாட்டுகள், அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்ததன் பின்னணி உள்ளிட்ட விவரங்களை விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க…

“12 மணிநேரம் உழைச்சு, அரசுக்கு 50% வரி” – புலம்பும் ஊழியர்!

சஞ்சித் கோயல்

நீங்கள் வாங்கும் குண்டூசியில் இருந்து கோட் சூட் வரை ஜி.எஸ்.டி உண்டு.

எதற்கு, ஏன், எவ்வளவு என்று தெரியாமல் உங்களின் பணம் நூதன முறையில் பெறப்படுகிறது.

இந்த குமுறல் வெகுஜன மக்கள் மத்தியில் இருந்தாலும், இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சித் கோயல் என்பவர் தனது ட்விட்டர் பதிவில் புலம்பி உள்ளது வைரலாகி உள்ளது.

அதை படிக்க இங்கே க்ளிக் செய்க…

உங்கள் வாழ்க்கையை எளிதாக்க சிம்பிளான வழிகள் இதோ…

மினிமலிசம்

ங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்போது (சிம்பிளிசிட்டி) நீங்கள் நல்லதொரு மாற்றத்தை நோக்கிச் செல்வீர்கள். ஆரோக்கியமான, எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

10 நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் 18 வழிகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

FIFA: இந்திய கால்பந்து அணிக்கு எத்தனையாவது இடம்?

இந்திய கால்பந்து அணி

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியப்போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சிகளையும் இந்திய கால்பந்து அணி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச கால்பந்து அமைப்பான FIFA கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி எத்தனையாவது இடத்தைப் பிடித்திருக்கிறது… தற்போதைய அதன் புள்ளிகள் எத்தனை என்பது உள்ளிட்ட தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மருத்துவப் படிப்புக்கு மாற்று வாய்ப்புகளைத் தரும் JGEEBILS தேர்வு!

கற்பது உலகளவு

ருத்துவத்துறையில் ஆர்வமுள்ள, B.Sc முடித்த மாணவர்களுக்கு உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சித்துறையில் பிரமாண்டமான வேலைவாய்ப்புகள் கொண்ட பல படிப்புகள் உள்ளன.

சுமார் 20 கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள், இதற்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

இந்த நிறுவனங்கள் எங்கெங்கு இருக்கின்றன, இதற்காக எந்த தேர்வை எழுத வேண்டும்… என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த வார ஆனந்த விகடன் இதழில் சொல்கிறார் கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்..

படிக்க இங்கே க்ளிக் செய்க…

சினிமா விமர்சனம்: ‘சத்திய சோதனை’

சத்திய சோதனை

சுவாரஸ்யமான கதைக்களம், ஆங்காங்கே காமெடி! ஆனால் படமாக க்ளிக் ஆகிறதா?

எடுத்த எடுப்பிலேயே ஒரு கொலை, நகைத் திருட்டு என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது கதைக்களம். இருப்பினும் கதையின் நாயகன் பாத்திரம் பார்வையாளர்களுக்கு அந்நியமாக இருப்பதால் வந்த சுவாரஸ்யம் விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது.

படிப்பறிவற்ற கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி. அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யாமல் பிரேம்ஜி ஆகவே அவர் நடித்திருப்பது கதையின் போக்கில் ஒட்டாமல் தனியாகத் தெரிகிறது.

விமர்சனத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

சினிமா விமர்சனம்: Oppenheimer

நோலனின் அறிவியல், அரசியல் படம் எப்படி?

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

from Tamilnadu News https://ift.tt/gjNEJhs