
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டு வரும் முன்னீர்பள்ளம் சமுதாயக் கூடத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டார்


மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, வேலூர் தி.மு.க மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து,
விருதுநகரில் தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண உற்சவ விழாவை முன்னிட்டு, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பூப்பல்லாக்கில் தவசு மண்டபகப்படியிலிருந்து எழுந்தருளினார்.


தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்ட முகாமை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மத்திய அரசைக் கண்டித்து, நாகர்கோவில் தலைமைத் தபால் நிலையம் முன்பு குமரி மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் வேலை கேட்டு போராட்டம்.

அரசு கலை பண்பாட்டுத்துறையும் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து ஏற்பாடு செய்த, கவிஞர் வாணிதாசனார் பிறந்தநாள் விழாவில் சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினார்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மையத்தின் 2-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினர்.

நகரப் பகுதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பது குறித்து போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்.

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று ஆதரவற்ற பெண்கள் (கணவரை இழந்தவர்கள்) கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று, எலவமலை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் பழங்குடிப் பெண்கள் இருவர்மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைக் கண்டித்தும், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டன:
இடம்: சிந்தாதிரிப்பேட்டை.


கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
from Tamilnadu News https://ift.tt/UNhPV7C
