மணிப்பூரில் நடந்தும் வரும் வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் நாட்டு மக்களின் மனதை உலுக்கியிருக்கின்றன. மத்தியிலும், மணிப்பூரிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க வன்முறை, கலவரத்துக்கு இன்னும் தீர்வு காணாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில், பீகார் மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் வினோத் சர்மா பா.ஜ.க-விலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள், பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது, இதுபோன்ற நூற்றுக்கணக்கான வழக்குகள் இருக்கின்றன என முதல்வர் என்.பிரேன் சிங்கே கூறியிருக்கிறார். மணிப்பூரில் உள்ள சூழ்நிலை இந்தியாவை அவமதித்துவிட்டது. நான் கனத்த இதயத்துடன் பா.ஜ.க-விலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இனக்கலவரத்தால் பீடிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவும் சூழலை ஒரு மனிதனாக என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால், பிரதமர் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார், முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய அவருக்கு தைரியம் இல்லை. கட்சியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, மணிப்பூரில் நடப்பது போன்ற கொடூரம், வேறு எங்கும் நடந்ததில்லை எனக் கட்சித் தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் மோடி ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்” எனக் கூறினார்.

from Tamilnadu News https://ift.tt/CKjwxIl