

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு மற்றும் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இடம்: கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை, கிண்டி


ஊட்டியை அடுத்த எல்லநள்ளி பகுதியில் இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அகற்றினர்.


பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே போக்குவரத்து நெரிசல்!

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில்,
வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த்.




குன்னூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிக்கான லோகோவை அறிமுகம் செய்தனர்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் பாதயாத்திரை நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட்-வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழ்நாடு வருகை தொடர்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி சுசீந்திரத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே போக்குவரத்து நெரிசல்!

அரியநாயகி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும்,பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரியும் பாதகை அணிந்து மாநகராட்சி கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர்.


தற்காப்பு, யோகா கலையில் இரண்டு உலக சாதனைகளைப் படைத்த மாணவர்கள் ஜென்ஸ்கர், யோஜென் ஆகியோரை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்.

சி.ஐ.டி.யு சார்பில் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தக் கோரிகையை நிறைவேற்றக் கோரி, வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குன்னூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்தனர்.

மணிப்பூர் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கல்விக்கொள்கை மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சிறப்பு கல்வித் திட்டச் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவுதினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.


from Tamilnadu News https://ift.tt/Sgdf28c
