தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று ‘என் மண் என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பாதயாத்திரையைக் கொடியை அசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றம் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை விமர்சித்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ஊழல் வழக்கில் பா.ஜ.க நிர்வாகிகள் ஈடுபட்டிருப்பதைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து பா.ஜ.கவை சேர்ந்த சிலரைக் கைது செய்தனர்.

நடிகரும், பா.ஜ.க நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். இதை அடுத்து ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடியில் பா.ஜ.கவினர் சிக்கி உள்ளதை சுட்டிக்காட்டி, ஆருத்ரா ஊழல் மறைப்பு நடைபயணம் என்ற தலைப்பிட்டு, அண்ணாமலை, ஹரிஷ், அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே சுரேஷ் ஆகியோர் பெயர் புகைப்படங்களுடன் ”ஆருத்ரா மூலம் கொள்ளையடித்த ரூ.3000 கோடி எங்கே? எங்கே?” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை ஒட்டியதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை மத்திய உளவுப் பிரிவை விசாரிக்கச் சொல்லி இருக்கிறது பா.ஜ.க. தரப்பு. இந்த போஸ்டர் அண்ணாமலையை அப்செட் ஆக்கியிருப்பதாகவும் பேச்சு!
from Tamilnadu News https://ift.tt/sIXWuAy
