கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில், தனியார் கல்லூரியில், படிக்கும் மாணவிகள் சிலரின் Rest Room வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று மாணவிகள் கல்லூரிக்குள் இருக்கும் Rest Room-ல் மொபைல் போன் வைத்து, சக மாணவிகளை வீடியோ எடுத்து அதை தங்களுடைய ஆண் நண்பர்களுக்கு அனுப்பிவந்தது தெரியவந்தது.

கல்லூரி நிர்வாகத்தினர் அந்த மாணவிகளிடமும் விசாரித்தபோது, மாணவிகளைப் பழிவாங்கும் நோக்கில் வீடியோ எடுத்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மூவரையும் கல்லூரி நிர்வாகத்தினர் சஸ்பெண்டு செய்தது. அதைத் தொடர்ந்து, சமூக வலைதலங்களில் இந்த விவகாரம் விவாதப்பொருளானது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடுப்பி வழக்கை அரசியல் ஆயுதமாக பா.ஜ.க பயன்படுத்துகிறது”எனக் குற்றம்சாட்டியது. அந்த ட்விட்டை ரீ ட்விட் செய்த கர்நாடக பா.ஜ.க பிரமுகர் சகுந்தலா,”சித்தராமையாவின் மருமகள் அல்லது அவரது மனைவிக்கு இதுபோல நடந்தால்… அப்போதும் இதையே சொல்றீங்களா?” எனப் பதிவிட்டிருந்தார்.
பா.ஜ.க நிர்வாகி சகுந்தலா, கர்நாடக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமதித்து ட்வீட் பதிவிட்டதற்காக, பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க பிரமுகர் சகுந்தலாவை கைது செய்திருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/KtCB71q
