“தேசிய ஜனநாயக் கூட்டணியில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தான் வாக்கு வங்கியுள்ள கட்சிகள், மற்றவர்களெல்லம் தனி நபர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே..?”

“தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இல்லையென சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் சொல்லிட்டு போகட்டும். எங்களிடம் நரேந்திர மோடி எனும் முகம் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக நின்று வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

குஷ்பு

“I.N.D.I.A கூட்டணி வலிமையடைந்து வருவதை உங்களால் மறுக்க முடியுமா?”

“மோடி எனும் ஒரு முகத்தை தோற்கடிக்க அத்தனை பேர் கூடுகிறார்கள். மோடியை எதிர்க்கும் முகமாக யார் இருக்கப் போகிறார்கள்… வலிமையான கூட்டணி எனச் சொல்லிக் கொள்கிறார்களே…. ஏன் அவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஏனெனில் அந்த கூட்டணியில் யாருக்கும் மோடியை எதிர்க்கும் தகுதியோ தைரியமோ கிடையாது.”

குஷ்பு

“நீங்கள் கோரிக்கை வைத்தவுடன் தி.மு.க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்…. வானதி சீனிவாசன் மீது பா.ஜ.க எப்போது நடவடிக்கை எடுக்கும்?”

“வானதி அவர்கள் இவ்வளவு தவறாக பேசியதை எங்கேயும் நான் பார்க்கவில்லையே.”

“ஒரு கட்சியினரை குறிப்பிட்டு காலை ஒரு வீட்டிற்கு மாலை ஒரு வீட்டிற்கு செல்வார்கள் என்றார் வானதி சீனிவாசன்…”

“அவர் பேசியதை நான் பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டம் படித்தவர், அவர் பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் தேசிய தலைவர். நிச்சயமாக தவறான வார்த்தைகளை விட்ருக்க வாய்ப்புகள் இல்லை. அதனை நான் உறுதியாக சொல்லமுடியும்.”

குஷ்பு

“நீங்கள் திமுக, காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்திருக்கிறீர்கள்… பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி எது?”

“எல்லா கட்சியிலும் எல்லா வகையான ஆண்களும் இருக்கிறார்கள். இந்த கட்சி பாதுகாப்பானது, அந்த கட்சி பாதுகாப்பு என்பதைவிட எந்த கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது பா.ஜ.க-தான். ”

குஷ்பு

“அண்ணாமலை வந்த பிறகுதான் கட்சி வளர்ந்திருப்பதாக பேசியிருக்கிறீர்கள்… இதற்கு முன்பிருந்த மாநிலத் தலைவர்கள் எதுவுமே செய்யவில்லையோ?”

“நான் சொல்ல வருவதை முழுதாக புரிந்துக்கொள்ளாதவர்களின் விமர்சனம் இது. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா, தமிழிசை செளந்திரராஜன், எல்.முருகன் ஆகியோரும் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். என்னை போன்றவர்கள் எல்.முருகனை நம்பித்தான் கட்சிக்கே வந்தோம். அவர்கள் வகுத்து கொடுத்தவற்றை அண்ணாமலை முன்னெடுத்து செல்கிறார். அவ்வளவுதான்.”

குஷ்பு

“2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?”

“எனக்கு தெரியாது, கட்சி மேலிடத்தில் இருப்பவர்கள்தான் முடிவு செய்யவேண்டும். எந்த இடத்தில் யாரை நிற்க வைத்தால் வெற்றிபெற முடியும் என்பது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரியும். நாம் எம்.பி ஆகவேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தைவிட கட்சி வளர்ச்சித்தான் எனக்கு முக்கியம்.”

from Tamilnadu News https://ift.tt/WAr28fP