விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க-மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஊடகங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர், அதனால் இந்த மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார் அவ்வளவுதான். அதுபோல அண்ணாமலை, தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து இரண்டாம் பாகம் வெளியிட்டது குறித்து, நான் இன்னும் பார்க்கவில்லை.

நினைவுப் பரிசு

ஓ.பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்ததே இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திதான். அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தே பயணிப்போம்” என்றார்.

`அண்ணாமலையின் நடைப்பயண தொடக்கவிழாவுக்கு உங்களை அழைக்கவில்லையா?’ என்ற கேள்விக்கு, “நாங்கள் என்.டி.ஏ.கூட்டணியிலே இல்லை. அதனால் எங்களை பா.ஜ.க-மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்துக்கு அழைக்கவில்லை. எனவே, உங்களின் கேள்வியே தவறானது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வின் நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பரில் தெரிவிக்கப்படும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/e4TOM5y