மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் மற்றும் கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக மத்திய, மாநில பா.ஜ.க அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், “இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சாத்தானின் குழந்தைகள்” என்ற தொனியில் பேசியதற்கு, பல தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் கிளம்பின.

கடும் விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், இது குறித்து விளக்கமளித்த சீமான், “ `நாட்டில் நடக்கும் அநீதிகளைச் சகித்துக்கொண்டிருப்பவன் சாத்தானின் நண்பன்’ என இஸ்லாமும், `சாத்தானின் குழந்தைகள்’ என பைபிளும் கூறுகின்றன. அதைத்தானே நானும் கூறினேன்… அநீதிக்கு எதிராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திலும், கிறிஸ்துவ சமயத்திலும் இருந்துகொண்டு, அநீதிக்கு ஆதரவாக நிற்பவர்களைத்தான் குறிப்பிட்டேன்” எனக் கூறியிருந்தார்.
சீமானின் இத்தகைய பேச்சு தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் சல்மா, “முதலில் சீமானிடம் தெளிவான கருத்துகளே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார். சிறுபான்மையினரை, `தமிழர்கள் இல்லை’ என்பார். பிறகு அவரே சிறுபான்மையினரை `தமிழ்ப்பிள்ளைகள்’ என்பார். ஒரு தலைவருக்கான எந்தத் தகுதியும் அவரிடமில்லை. மேடையில், `செருப்பால் அடிப்பேன்’ என்பதுபோலான அநாகரிகமான முறையில் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் அநீதிக்கு எதிராக என்ன செய்திருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறாரே, ஏன் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லையா… இப்படிப் பேசுவதையெல்லாம் பார்த்தால்… சீமான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் செயல்திட்டத்தை வேறு ரூபத்தில் எடுத்துவருகிறார் என்பதுபோலத்தான் தெரிகிறது” என்றார் காட்டமாக.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஜவகர் அலி நம்மிடம் பேசுகையில், “சீமான் செய்வது கேவலமான அரசியல். தனக்கு வாக்களிக்காத இஸ்லாமிய, கிறிஸ்துவர்களை சாத்தானின் பிள்ளைகள் என இதுவரை எவருமே பேசியதில்லை. இஸ்லாமிய, கிறிஸ்துவர்களைப் பற்றி இப்படியான நச்சுக் கருத்துகளைப் பேசியதற்கு சீமான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இப்படியெல்லாம் பேசியதால் இனி ஓர் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கூட சீமானுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார் கொதிப்புடன்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன், “இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவதில்லை. ஒட்டுமொத்த 18% வாக்குகளும் தி.மு.க-வுக்குச் செல்கின்றன என்ற வாதமே முதலில் தவறானது. கடந்த தேர்தல்களில் சீமானுக்கு வாக்களித்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பெருமளவில் இல்லையென்றாலும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியான நிலையில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை என்ற தொனியில் பேசியிருப்பது ஏற்கெனவே சீமானுக்கு வாக்களித்துவரும் இஸ்லாமிய, கிறிஸ்துவர்களின் வாக்குகளை பாதிக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. சீமான் இந்த மாதிரியான பேச்சை தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், “தேர்தலில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் வேட்பாளராக நிறுத்துவதில் தொடங்கி அவர்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் வருகிறார் சீமான். இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் போர்க்குரல் எழுப்புகிறது நாம் தமிழர் கட்சி. இதுவரை மூன்று தேர்தல்களைச் சந்தித்துவிட்டோம்.

அதில் வெற்றிபெறவில்லை என்றாலும்கூட, வாக்குகள் கணிசமாக அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. வரக்கூடிய தேர்தல்களிலும் கட்சியின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். இனிமேல் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்ற விமர்சனம் அர்த்தமற்றது. மக்கள் எங்களுடன் இருப்பதால், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது” என்றார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
from Tamilnadu News https://ift.tt/w8UG4xe
