தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, தரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வீடியோக்களும் ஊடகங்களில் வெளியானது. பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக பல்வேறு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

உணவு

இந்த நிலையில், உணவு தரம் குறித்து அரசுக்கு மக்கள் எளிதில் புகாரளிக்கும் வகையில் வாட்ஸ் அப் நம்பரை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா, மீன் மற்றும் அனைத்து வகையான இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும்15,236 உணவகங்களை ஆய்வுசெய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5,018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், தேங்காய் சட்னி, தயிர் மற்றும் மோர் ஆகிய உணவு பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு, 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்

ஒட்டுமொத்தமாகத் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட தொகை ரூ.10,26,800 ஆகும். உணவு தயாரிப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை உணவு வணிகர்கள் தாங்களாகவே சுய மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும். உணவு வணிகர்களின் சங்கங்களுக்கு கூட்டங்களை நடத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், உண்ணத் தகுந்த உணவை தேர்வு செய்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வாட்ஸ்அப்

அதுமட்டுமல்லாமல், உணவின் தரம் குறித்த புகார்களை TN Food Safety Consumer App மூலமாகவும், 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அறிக்கையில், புகையிலை மற்றும் நிகோடினை சேர்மானமாகக் கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை ஓராண்டு நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/tZzjo2V