தமிழ்நாட்டின் சட்டசபைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், காவிரி நதி நீர் உரிமையைக் காப்பதில் எப்போதும் உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மன்றத்தில் முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது.

டி.கே.சிவக்குமார் – ஸ்டாலின்

மேட்டூர் அணை தி.மு.க ஆட்சியில் டெல்டா விவசாயிகளுக்காக சீராக திறந்துவிடப்படுகிறது. 2021-ம் ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு முறையாக தூர்வாரப்பட்டதனால், காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021- 2022-ம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவிலும், 2022- 2023-ம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, சாதனையைப் படைத்தோம், உற்பத்தியும் பெருகியது.

உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனை இந்த ஆண்டும் தொடர்ந்தது. இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டி.எம்.சி நீர் அளவையும் தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில்கொண்டு, 12.6.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காக திறந்து வைத்தோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றவில்லை. தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி, தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அமைச்சரையும் நமது குழு சந்தித்து முறையிட்டது.

சட்டமன்றம்

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் 56 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தபோதும், பிலிகுண்டுலுவுக்கு 13 சதவிகிதம் நீரே திறந்துவிடப்பட்டது.

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் தண்ணீர் தேவை மட்டுமல்ல, உயிர்தேவையும் காவிரி நீர்தான். தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும் காவிரி நதிநீர் உரிமையைக் காப்பதில் தி.மு.க என்றும், எப்போதும், எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/fmKbGOh