இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த ஏழு நாள்களாகப் போர் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முதலில், `ஹமாஸ் குழுவினர்தான் ஏவுகணை தாக்குதல் தொடுத்தனர். அதனால் நாங்கள் தற்போது பதிலடி கொடுத்துவருகிறோம்’ என காஸா நகரையே கடுமையாகத் தாக்கிவருகிறது இஸ்ரேல். ஆனால், இரு தரப்பிலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், என அப்பாவி மக்கள்தான் இதில் அதிகமாக கொல்லப்படுகின்றனர்.

இந்தியப் பிரதமர் மோடி – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இந்தப் போரில், இந்தியாவும் அமெரிக்காவும், ஹமாஸ் தாக்குதலைத் தீவிரவாத தாக்குதல் எனக் கூறி இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. இந்த நிலையில், தீவிரவாதம் எவ்வளவு பெரிய சவாலானது என்பதை உலகம் இப்போது உணர்ந்திருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் இன்று காலை, ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். அப்போது, தீவிரவாதம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் நம் நாடாளுமன்றத்தைக் குறிவைத்தனர். பல தசாப்தங்களாகவே எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான அப்பாவிகளைத் தீவிரவாதிகள் கொன்றிருக்கின்றனர்.

பிரதமர் மோடி

இப்போது, தீவிரவாதம் எவ்வளவு பெரிய சவாலானது என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. இது மனித குலத்துக்கே எதிரானது. இருப்பினும், தீவிரவாதத்தின்மீது உலகளவில் ஒருமித்த முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. இதனால்தான், மனித குலத்தின் எதிரிகள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்றங்கள் சிந்திக்க வேண்டும். இது அனைவரின் வளர்ச்சிக்கான நேரம்.

பிரதமர் மோடி

இன்று உலகம் எதிர்கொள்ளும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகத்தால், மனித குலத்தின் முன்னிருக்கும் சவால்களுக்குத் தீர்வை வழங்கமுடியாது. எனவே, உலகளாவிய நம்பிக்கையின் வழியில் உள்ள தடைகளை அகற்றி, மனிதநேயத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற உணர்வோடு இந்த உலகைப் பார்க்க வேண்டும். உலகளாவிய சவால்களைச் சமாளிக்க, மக்களின் பங்கேற்பே சிறந்த வழி” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/bBH5uP9