வேலூர் மாவட்டம், குப்பிரெட்டித் தாங்கல் கிராமத்தில், 2012-ம் ஆண்டு சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களை மின்சார வாரியம், அதன் தேவைக்காகக் கையகப்படுத்தியது. அப்போது, நிலத்தையிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. ஒரு சென்ட்டுக்கு ரூ.1,750 வீதம் மட்டுமே கொடுக்கப்பட்டது. ‘இழப்பீட்டுத் தொகை போதாது’ என பாதிக்கப்பட்ட 19 விவசாயிகள், வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ‘ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.5,000 மற்றும் கூடுதலாக 30 சதவிகிதம் சேர்த்து, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்’ என 2019-ம் ஆண்டே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற உத்தரவு நகல்

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படியும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் மேல் முறையீடு செய்தனர். இதையடுத்து, ‘வட்டியுடன் சேர்த்து ரூ.6,59,703 பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வேலூர் மாவட்ட ஆட்சியரின் 2 கார்கள் உட்பட அதிகாரிகளுக்குச் சொந்தமான 6 கார்கள், அலுவலகப் பொருள்கள் ஜப்தி செய்யப்படும்’ என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நீதிமன்றம் எச்சரித்தது.

அதன் பிறகும், அதிகாரிகள் மௌனம் சாதித்ததால், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் நேற்றைய தினம் வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, ‘மாவட்ட ஆட்சியர்’ எனும் பெயர் மறைக்கப்பட்டிருந்த காரை ‘ஜப்தி’ செய்வதாக நோட்டீஸ் ஒட்டினர்.

வேலூர் ஆட்சியரின் கார்

இதையடுத்து, ஆட்சியர் அலுவலக மேலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து, நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 15 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸை அகற்றிவிட்டு, ஆட்சியரின் காரை விடுவித்துச் சென்றனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகமே பரபரப்பாகக் காணப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/Hg49Xkh