டெல்லியில் 2010-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி `Azadi – the Only Way Ahead’ என்ற மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய் (61), காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் உசைன் கிலானி, காஷ்மீர் அரசியல்வாதி சயீத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எழுத்தாளர் அருந்ததி ராய் உட்பட மூன்று பேர்மீது, காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் என்பவர், 2010-ம் ஆண்டு டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் புகார் அளித்திருந்தார்.

அருந்ததி ராய்

இதன்பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. இது போன்ற குற்றச்செயல்களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமானால், அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதற்காக டெல்லி யூனியன் பிரதேச அரசிடம் போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர்மீது (சயீத் அலி ஷா கிலானி இறந்துவிட்டதால், அவர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டார்) குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் `தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற நூலின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர். 1977-ம் ஆண்டு புக்கர் விருது பெற்றவர். பிரதமர் மோடி குறித்தும், அவரது அரசியல் செயல்பாடுகளின் தீவிரம் குறித்தும் வெளிப்படையாகத் தனது கருத்துகளை முன்வைப்பவர். தொடர்ந்து அது தொடர்பாக எழுதியும்வருகிறார். இந்த நிலையில்தான், அவர்மீது வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். தற்போது ஆளும் பா.ஜ.க அரசின்மீது விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா

“அதை உறுதிப்படுத்தும்விதமாகவே, 2002-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தபோது ஏற்பட்ட கலவரம் குறித்து, பி.பி.சி நிறுவனம் The Modi Question என்ற பெயரில் வெளியிட்ட ஆவணப்படம் தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பி.பி.சி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள், பி.பி.சி அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்” என எதிர்க்கட்சியினர் மத்திய அரசைச் சாடுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/a89phnq