பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் ஒன்றான சட்டக் கல்வியைப் பயில அனைத்து நாடுகளிலும் மாணவர்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. உலகின் தலைசிறந்த வழக்கறிஞராக வர, நீதிபதியாக வர, என மாணவர்கள் முட்டி முட்டி படித்துக் கொண்டிருக்க, சட்டக் கல்வியே பயிலாமல் கென்யாவில் ஓர் பிரபல `போலி வழக்கறிஞர்’ 26 வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும் சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சrர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

நீதித்துறை

கென்யாவைச் சேர்ந்தவர் பிரையன் முவெண்டா (Brian Mwenda). கென்ய உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வலம் வந்த இவர், அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், சமரசத் தீர்வு மையம் என பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி, வாதாடி, 26 வழக்குகளில் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும், இவர் தற்போது எவ்வளவு வழக்குகள் நடத்தி வருகிறார் என்ற தெளிவான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில், இவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பொதுப் புகார்களின் அடிப்படையில், இவரது கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்த கென்யா லா சொசைட்டியின் (Law Society of Kenya ) நைரோபி கிளையின் `ரேபிட் ஆக்சன் டீம்’ ( Rapid Action Team of the Nairobi Branch) அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஏனெனில், பிரையன் முவெண்டா வழக்கறிஞர் படிப்பையே படிக்கவில்லை. இவ்வளவு நாளாகப் போலி வழக்கறிஞராக வலம் வந்துதான் இவ்வளவு வழக்குகளையும் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார். இதுகுறித்து கென்யா லா சொசைட்டி, தனது அதிகாரபூர்வ X தளத்தில் “பிரையன் முவெண்டா ஒரு வழக்கறிஞர் அல்ல. அவர் அவ்வாறு பொய்யாக பொதுமக்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்ததையடுத்து, தற்போது கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு தரப்புகளிலிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி முழு உண்மைகளையும் வெளிப்படுத்துவோம்” எனத் தெரிவித்திருக்கிறது.

பிரையன் முவெண்டா

இவ்வாறு, நாட்டின் முக்கியத் துறையான சட்டத்துறையில் சட்டம் படிக்காமலேயே ஒருவர் இவ்வளவு நாள் வழக்கறிஞராக வலம் வந்து வழக்குகள் நடத்தி வெற்றியும் பெற்றது கென்யா மக்களிடையே பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. அதேநேரத்தில், சட்டம் படிக்காமலேயே இவ்வளவு திறமையாக வழக்கு நடத்தி, வாதாடி வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/2CfWmv5