மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 230 உறுப்பினர்கள்கொண்ட மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான 144 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை, காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், புத்னி தொகுதியில் தற்போதைய முதல்வரான சிவராஜ் சிங் சௌஹானை எதிர்த்து, காங்கிரஸ் சார்பாக நடிகரான விக்ரம் மஸ்டல் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஆனந்த் சாகர் இயக்கிய ‘ராமாயன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனுமன் வேடத்தில் 2008-ல் நடித்ததால், மிகவும் பிரபலமானார் மஸ்டல். மேலும் டாப் கியர் (2022), வலைத் தொடரான Battle of Saragarhi (2017), Aashram (2020) ஆகிய திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும்பாஜக, 136 சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்ட அதன் நான்காவது பட்டியலில், முதல்வர் சௌஹான், புத்னி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புத்னி தொகுதி சௌஹானின் கோட்டையாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அருண் யாதவைத் தோற்கடித்து, 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் சௌஹான் வெற்றி பெற்றார். இந்த நிலையில், விக்ரம் மஸ்டலுக்கு இந்த தேர்தல் கடுமையானதாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/gxQpyIz
