அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கக் கூடாது, அந்த இருக்கையில் ஆர்.பி.உதயகுமாரை அமர வைக்க வேண்டும்’ என, சபாநாயகர் அப்பாவுவை தொடர்ந்து வலியுறுத்தி கடிதமெல்லாம் அளித்து வருகிறார்.

இருப்பினும் சபாநாயகர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை நடுநிலையாக எடுக்கவில்லை என அ.தி.மு.க-வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. வழக்கம்போல, எடப்பாடி பழனிசாமி இருக்கை விவகாரம் குறித்து கேள்வியெழுப்ப, `இருக்கையை யாருக்கு வழங்க வேண்டும் என்பது, என்னுடைய உரிமைக்கு உட்பட்டது. அதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல் செய்ய முடியாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நான் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார் சபாநாயகர். இதனால் பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அந்த நிலையில், நமது விகடன் தனது வலைதளப் பக்கத்தில், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை, ஓ.பி.எஸ்ஸுக்கு பதிலாக, ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்ற அ.தி.மு.க-வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து வருவது…” குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் ‘சபாநாயகரின் உரிமை’ – ‘அரசியல் செய்கிறார்’ – ‘கருத்து இல்லை’ என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை, ஓ.பி.எஸ்ஸுக்கு பதிலாக, ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்க வேண்டும் என்ற அ.தி.மு.க-வின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து வருவது…”

`சபாநாயகரின் உரிமை’ என 36 சதவிகித வாசகர்களும், `அரசியல் செய்கிறார்’ என 61 சதவிகித வாசகர்களும், `கருத்து இல்லை’ என 3 சதவிகித வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள். விகடனின் அடுத்த கருத்துக்கணிப்பு, “தன்பாலின திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது… இது குறித்த உங்களின் கருத்தை தெரிவிக்க https://www.vikatan.com/ இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
from Tamilnadu News https://ift.tt/6UDMENV
