சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வட மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் கூட்டணி விவகாரங்கள் தொடர்பாகவும், நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக தாக்கிப் பேசியதும் பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் மட்டுமே தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து அவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வந்தது. இந்நிலையில் தி.மு.க அ.தி.மு.க-வுக்கு இணையாக வி.சிக-வும் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.
இதில் வட மண்டல நாடாளுமன்ற தொகுதியின் 13,000 வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட 15,000 விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர். வாக்குச்சாவடி முகவர் பயிற்சி கூட்டத்தில் பேசிய திருமாவளவன் “I.N,D.I.A கூட்டணி உருவானதில் வி.சி.க-வின் பங்கு மகத்தானது. உருவாக காரணமாக இருந்த நாங்களா… I.N,D.I.A கூட்டணியை பலவீன படுத்த போகிறோம்? எடப்பாடி நலம் விசாரித்தார் என்பதற்கு தி.மு.க கூட்டணியை விட்டு வெளியே வருவேன் என திரிபுவாதம் செய்கிறார்கள்.
தி.மு.க கூட்டணியின் அனைத்து கட்சி வெற்றிக்கும் வி.சி.க தொண்டர்கள் உழைக்க வேண்டும்” எனப் பேசி கூட்டணி குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த திருமாவளவன், நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்தார். “2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வென்றால் அரசியல் அமைப்பு சட்டத்தை தூக்கி எறிவார்கள். சனாதன சக்திகள் 2024 -ல் வீழ்த்தப்படும். பாஜக வீழ்த்தபட இந்தியா கூட்டணி நாடு முழுக்க வலிமையடைய வேண்டும் என்ற முழக்கத்தை தமிழ்நாடு மட்டுமல்ல இதர மாநிலங்களும் எழுப்புகிறது விசிக’ எனப் பேசியவர் ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
`தேர்தலில் தனித்து நிற்பது என்பது அரசியல் அறியாமை’ என்றும் `ஈழ பிரச்னைக்கு என்றைக்கும் நேர்மையோடு போராடுகின்ற இயக்கம் விடுதலை சிறுத்தைகள்., ஈழப் போரின் போது பிறக்காத அல்லு சில்லுகள் எல்லாம் இப்போது அலளப்பறை செய்து கொண்டிருக்கிறது’ எனச் சாடினார். இறுதியாக திண்ணை பிரசாரம் செய்யுங்கள், பெண்களை அரசியல் படுத்துங்கள், வாக்கு சாவடி கமிட்டியை அமையுங்கள் என விசிக வாக்கு சாவடி முகவர்களுக்கு ஆணையிட்டார் திருமாவளவன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/mzu6pyr
