முஸ்லிம்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொள்ள அவர்களது மதம் அனுமதிக்கிறது. இது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் அரசு ஊழியர்கள் இறந்துவிட்டால், அவர்களின் மனைவிகள் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, அஸ்ஸாமில் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள மாநில அரசு தடைவிதித்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் ஹிமந்தா சர்மா அளித்த பேட்டியில், “முஸ்லிம்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் ஓய்வூதியத்துக்காக இரண்டு பெண்களும் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சட்டம் அனுமதிக்கவில்லை. இப்போது நாங்கள் அந்தச் சட்டத்தை அமல்படுத்த முடிவுசெய்திருக்கிறோம். மாநில அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

அப்படித் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அதற்கு அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த உத்தரவில், `அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் செய்துகொள்வதற்கு தடைவிதிக்கப்படுகிறது. தனிப்பட்ட மத சட்டங்கள் பலதார மணத்துக்கு அனுமதி கொடுத்தாலும், அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியாது.
அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கும் இதே விதிகள் பொருந்தும். உத்தரவை மீறிச் செயல்படுபவர்களுக்கு கட்டாய ஓய்வு, கடுமையான அபராதம், இலாகாபூர்வ ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்ஸாம் அரசு மைனர் திருமணங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/nMuqyT4
