கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் Jehovah Witnesses group என்ற கிறிஸ்தவக் குழு நேற்று பிரார்த்தனைக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது திடீரென 3 குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று  டொமினிக் மார்ட்டின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “Jehovah Witnesses group என்ற இந்தக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். இவர்களின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. நாட்டுக்கு  விரோதமாகச் செயல்படுகிறார்கள். அதனால்தான் நான் குண்டு வைத்தேன். இதற்கு நானே பொறுப்பு” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்திலும் சரணடைந்தார். காவல்துறை அவர்மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மேலும், இந்த வழக்கைத் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) கையில் எடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா அரசும் 20 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் விசாரணைக்காக அமைத்திருக்கிறது. இதனிடையே கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதள  பக்கங்களில், மத்திய அமைச்சர் ராஜீவ்  சந்திரசேகர், “சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல்தான் இத்தனைக்கும் காரணம்” எனக் காங்கிரஸ் –  சிபிஎம்  கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார்.

பினராயி விஜயன்

பா.ஜ.க தலைவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் இந்த  விமர்சனங்களுக்கு  முதல்வர்  பினராயி  விஜயன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில், முன்னாள் பா.ஜ.க தலைவரும், ஜார்கண்ட் ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், “கேரளமும், தமிழ்நாடும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் பல்வேறு ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. துரதஷ்டவசமாக கேரள கம்யூனிஸ்ட் அரசாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் தி.மு.க-வாக இருக்கட்டும் இரண்டு அரசுகளும் தீவிரவாதிகளை ஆதரிப்பதுதான் இஸ்லாத்தை ஆதரிப்பது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெடிகுண்டுகளை வைப்பவர்களை, கொலை செய்பவர்களைப் பாதுகாக்கும் அரசாகத்தான் இரண்டு அரசுகளும் இருக்கின்றன.

சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜ, பொன் ராதாகிருஷ்ணன்

அதனால்தான் இதை களையெடுக்க முடியவில்லை. நிச்சியமாக ஒரு கிறிஸ்தவர், தன்னுடைய கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வைத்திருப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. எனவே, கேரள அரசு முனைப்புடன் செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். என்.ஐ.ஏ இதில் தலையிட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பேராபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும்” எனச் கருத்து தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/aGKtXnI