மும்பையில் 10 லட்சம் தமிழர்கள் இருந்தாலும், ஒரு தமிழ் எம்.எல்.ஏ. மட்டுமே இருக்கிறார். மும்பை சயான் கோலிவாடாவில் பா.ஜ.க. சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழ்செல்வம். 2017-ம் ஆண்டு தமிழ் செல்வம் கவுன்சிலராக இருந்த போது சயான் கோலிவாடா பஞ்சாப் காலனியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பழைமையான கட்டடத்தில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அப்போது தமிழ் செல்வம் தலைமையில் உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை பணியை செய்ய விடாமல் தடுத்தனர். அதோடு மாநகராட்சி ஊழியர்கள் இதில் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ.தமிழ் செல்வம் உட்பட ஐந்து பேர் மீது மாநகராட்சி ஊழியர்கள் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும், ரூபாய்13,500 அபராதமும் விதித்தார்.
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் அவர்களை தாக்கியதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டது. போலீஸார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுமேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “தண்டனை ஒருசாராக இருக்ககூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடத்தையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி 6 மாதம் சிறை தண்டனை விதித்துவிட்டு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக தனது தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். தீர்ப்புக்கு பிறகு பேட்டியளித்த தமிழ்செல்வம், `தான் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் பெண் போலீஸ் அதிகாரி உட்பட 12 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/ZcvCdxG
