இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல். இந்தப் போரில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலிகள் உயிரிழந்திருக்கின்றனர். அதேசமயம், இஸ்ரேல் நடத்தும் பதிலடி தாக்குதலில் இதுவரை 3,760 சிறுவர்கள், 2,326 பெண்கள் உட்பட மொத்தமாக 9,061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், சுமார் 32,000 பாலஸ்தீனியர்கள் காயமடைந்திருக்கின்றனர். இந்தக் தாக்குதல்கள் இன்னமும் நீண்டுகொண்டே தான் இருக்கின்றன.

இஸ்ரேல் காஸா தாக்குதல்

இருப்பினும், இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலை கண்டிக்காமல், தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம் என அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் மௌனம் காத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி நடந்தது தீவிரவாத தாக்குதல்தான் என மீண்டும் ஒருமுறை சொல்லியிருக்கும் இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிர்க்க நாம் நிற்கவேண்டும் என்றும், அதில்தான் பாலஸ்தீன பிரச்னையும் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

ரோமில் நேற்றைய தினம் நடைபெற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் இணைச் செயலாளர் அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அக்டோபர் 7-ம் தேதி நடந்தது பெரிய அளவிலான தீவிரவாத செயல். அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் இந்த பிராந்தியத்தையே வேறு திசைக்குக் கொண்டு சென்றுவிட்டது. ஆனால், இறுதியில் இந்தப் பிராந்தியத்தில் மோதல் சாதாரணமாக இருக்க முடியாது என்பதே அனைவரின் நம்பிக்கையாக இருக்க வேண்டும். இதில், வெவ்வேறு பிரச்னைகளுக்கு இடையில் ஒரு சமநிலையை நாம் காண வேண்டும். நாம் அனைவரும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

தீவிரவாதத்துக்கு எதிராக நாம் நிற்க வேண்டும். இதில்தான் பாலஸ்தீன பிரச்னையும் இருக்கிறது. பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளின் தீர்வாகவும் அது இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. நீங்கள் தீர்வு காண வேண்டுமானால், பேச்சுவார்த்தை மூலம் அதற்கு தீர்வு காண வேண்டும். மோதல் மற்றும் தீவிரவாதத்தின் மூலம் உங்களால் தீர்வு காண முடியாது. எனவே தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எந்தவொரு சிக்கலான சூழலிலும், சமநிலையை சரியாகப் பெறாமலிருப்பது புத்திசாலித்தனமல்ல. இது, மிகவும் கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையைத் தீர்ப்பதில் மிக முக்கியமான பகுதியாகும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/YLHexsz