ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2021-ல், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், தெலங்கானா முழுவதும் 3,800 கிமீ நடைபயணமும் மேற்கொண்டார். முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி ஆட்சிக்கு எதிரான தீவிர எதிர்ப்பு அரசியல் செய்துவந்த ஷர்மிளா, ஒரு கட்டத்தில் தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸுடன் தன்னுடைய கட்சியை இணைக்கப்போவதாகப் பேச்சுக்கள் எழுந்தன.

அதற்கேற்றார் போலவே, கடந்த செப்டம்பரில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார் ஷர்மிளா. இருப்பினும் அதன் பிறகு கொஞ்ச நாள்களிலேயே, தேர்தலில் தனித்து களமிறங்குவதாக ஷர்மிளா தெரிவித்தார். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், காங்கிரஸுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் ஷர்மிளா அறிவித்திருக்கிறார். இந்த முடிவு குறித்து காங்கிரஸ் எம்.பி குறித்து ராகுல் காந்திக்கு, கடிதமும் அனுப்பியிருக்கிறார் ஷர்மிளா.
அந்தக் கடிதத்தில், “ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறது. ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் இந்த முடிவு பல தொகுதிகளில், காங்கிரஸின் வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதை உறுதிசெய்யும். தெலங்கானாவைக் காப்பாற்றுவதற்கும், கே.சி.ஆரின் கொடூர ஆட்சியை அகற்றுவதற்கு களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

நான் எப்போதுமே தெலங்கானாவுக்காக நிற்கிறேன். அதற்காகத்தான் இந்த முடிவு. எனவே, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய ஷர்மிளா, “பி.ஆர்.எஸ் ஆட்சிக்கு எதிராக ஏராளமான எதிர்ப்பு நிலவுகிறது. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்தால், தேர்தலுக்குப் பிறகு சந்திரசேகர ராவ் மீண்டும் பதவியேற்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் அமையும். எனவே, அவ்வாறு செய்தால் வரலாறு என்னை மன்னிக்காது. காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் எந்த நோக்கமும் இல்லை. காங்கிரஸை விட தெலங்கானா மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/KfLAbph
