ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அது தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சத்யேந்தர் ஜெயின் மட்டும் உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீனில் வெளியே வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியின் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கிடையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக மற்றொரு ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் உள்ள அகல்தாரா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆனந்த் பிரகாஷ் மிரியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி மக்கள் நாட்டின் அரசியலை மாற்றி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றியளித்தனர். டெல்லியில் நாங்கள் செய்த வேலையைப் பார்த்து, பஞ்சாப் மாநிலமும் எங்களை ஆசீர்வதித்தது.

இப்போது பஞ்சாபில் டெல்லியில் நடைபெற்றது போன்ற வேலைகள் நடக்கின்றன. நல்ல பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. டெல்லியில், கெஜ்ரிவாலைக் கைது செய்வோம் என பா.ஜ.க-வினர் தினமும் மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… ஒருவேளை நீங்கள் என்னைக் கைது செய்தால் கெஜ்ரிவாலின் உடலைத்தான் உங்களால் நீங்கள் கைது செய்ய முடியும். ஆனால் கெஜ்ரிவாலின் எண்ணங்களை எப்படி கைது செய்வீர்கள்?. என் எண்ணங்கள் எப்போதும் மக்களுடன் தான் இருக்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/gOJABXi
