மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார் “பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால், இந்தியாவிலேயே வலிமையான பூத் கமிட்டி கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. திமுக அரசு மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். மக்களின் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் தன் வாரிசின் வளர்ச்சியை பற்றி மட்டும் சிந்தித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு கூத்து நடைபெற்றுள்ளது, நாமெல்லாம் புல்லட்டை ரோட்டில்தான் ஓட்டுவோம். ஆனால் கன்னியாகுமரியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் போடப்பட்ட மேட்டில் புல்லட் ஓட்டுகிறார். அவருக்கு இரண்டு பேர் பாடி கார்டாக வருகின்றனர்.
இவரின் தந்தை கரும்பு காட்டில் கான்கிரீட் தளம் அமைத்து ஷூ போட்டு நடந்தார். தந்தைக்கு தப்பாத பிள்ளை போல உதயநிதி உள்ளார்.
முதலில் ஒழுங்காக புல்லட்டை ஓட்டி பழகிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் விபத்து ஏதும் ஏற்பட்டால் அதற்கும் அதிமுகதான் காரணம் என கூறுவார்கள்.

அது மட்டுமல்லாது, திமுக-வின் சாதனைகளை மக்களுக்கு இளைஞர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று உதயநிதி கூறுகிறார். அப்படியென்றால் திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்யாதது, காவிரியிலிருந்து நீரை பெற்றுத் தராதது, விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டை பெற்றுத்தராதது, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதல் இடத்தில் உள்ளது, விபத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடமாக உள்ளது.
1000 கோடியை மகளிர் உரிமைதொகைக்கு அளித்துவிட்டு அதில் 633 கோடியை டாஸ்மாக் மூலம் திரும்ப பெற்றனர், இந்த சாதனைகளை எல்லாம் மக்களிடம் சொல்வார்களா?

சாதனை எதுவும் செய்யவில்லை வேதனைதான் அதிகரித்துள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களின் பொய் பிரசாரம் ஏதும் எடுபடாது.
நாள்தோறும் எடப்பாடியார் இந்த அரசை தோலுரித்துக் காட்டி, மக்கள் நலன் குறித்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார்.
520 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றனர்.

மத்திய அரசிடம் முரண்பாட்டை கடைப்பிடிப்பதால், நிதியை பெற்றுத் தர முடியவில்லை, அதேபோல் அதிகாரிகளிடமும், மக்களிடமும் ஒத்து போகவில்லை, இதனால் தமிழகத்துக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இந்த 28 மாதங்களில் ஏழரை லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டத்திற்கும் செலவிடப்படவில்லை. இதற்கு முதலமைச்சர் உரிய விளக்கம் இன்னும் கொடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக ஜாதி மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையில் ஆயிரம் பாராபட்சம் காட்டப்பட்டு வருகிறது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/64e7E1n
