“ `இந்தியா கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக் கொள்கிறார்களே?”

“பன்முகைத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே சின்ன சின்ன முரண்பாடுகளை தவிர்த்து இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம்.”

வேல்முருகன்

“சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் தேர்தல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துமா?”

“நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம் என திமுக அறிவிக்கவில்லையென்றால் சமூக நிதியை கோரி நிற்கிற தமிழ் சாதிகளின் வாக்குகள்கூட திமுக கூட்டணிக்கு வராமல் மடைமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜக-வின் கருத்தும் திமுகவின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது என்ற நிலை தமிழகம் முழுவதும் சென்றுவிடக் கூடாது“.

`வட மாநில தொழிலாளர்கள் வருகை எதிர்த்து பேசிவருகிறீர்கள்… அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன?”

“வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு முறையாக கவனம் செலுத்தி, சில வரையறைகளை கொண்டு வரவேண்டும் என்ற சொல்லிவருகிறேன். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இருப்பதுபோல இன்னர் லைன் பெர்மிட் முறையை கொண்டுவர வேண்டும். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், போலீஸார் மீதே தாக்குதல் என மோசமான நிலையில் இருக்கிறது. அதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்”

“பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி முறிவு பாசிட்டிங் சைன் என்கிறார் திருமாவளவன்… தி.மு.கவுக்கு நெருக்கடி என நீங்கள் கருதுகிறீர்களா?”

“கண்டிப்பாக ஏற்படும், இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை நடக்கவில்லை என்றால் இஸ்லாமிய வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. கிறிஸ்துவ மக்களின் வாக்குகளும் அ.தி.மு.கவுக்கு செல்லலாம். தனக்கு கிடைத்துக் கொண்டிருந்த வாக்குகள் கிடைக்காமல் போனாலே அது நட்டம்தானே!”

எடப்பாடி பழனிசாமி

‘‘அ.தி.மு.க-விலிருந்து கூட்டணி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக சொல்கிறார்களே… உண்மைதானா?’’  

“தி.மு.க கூட்டணியிலிருந்துகொண்டே நான் தி.மு.க-வை விமர்சிப்பதை சில அமைச்சர்கள் விரும்பவில்லை. எனவே, ‘கடைசி நேரத்தில் தி.மு.க உங்களைக் கழட்டிவிடலாம்’ என்று சிலர் சொன்னார்கள். அது நடக்கும்போது பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன்.”

சட்டமன்றம்

“சட்டமன்றத்தில் நீங்கள் பேசினாலே பரபரப்பாகிவிடுகிறதே! ”

“பெஞ்ச தட்டிட்டு போகிற சராசரி எம்.எல்.ஏ நானில்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை தொடர்ச்சியாக பேசிவருகிறேன். சில திட்டங்களில் இருக்கும் தவறுகளையும் விளைவுகளையும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறேன். தி.மு.க கூட்டணியில் இருப்பதற்காக மக்கள் பிரச்னையில் சமரசம் செய்துக் கொள்ள கூடியவன் நானல்ல. நான் சட்டமன்றத்தில் பேசுவதை முதலமைச்சரே உன்னிப்பாக கவனிப்பார்.”

from Tamilnadu News https://ift.tt/X2tgAcC