2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தி.மு.க இளைஞர் அணி மாநில மாநாடு டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கிறது. இதற்க்கு முன்னதாக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தலைமையில் மாவட்டம் தோறும் தி.மு.க இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

செயல்வீரர்கள் கூட்டம்

முன்னதாக மேடையில் பேசிய தி‌.மு.க துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “கொள்கை வழிப் பயணிப்பது தான் இளைஞர் அணியின் அடையாளம். இந்தியாவில் அந்த அடையாளத்தைப் பெற்றிருக்கும் ஒரு இளைஞர் அணியின் செயலாளர் தான் தம்பி உதயநிதி. ஒன்றை மட்டும் சொல்கிறேன். நம்முடைய எதிாிகள் சொன்னார்கள் ‘ஸ்டாலின் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி’ என்று. மலை உச்சியில் அமைந்துள்ள ஊட்டியில் இருந்து சொல்கிறேன். உதயநிதி ஸ்டாலின் வில் பி மோஸ்ட் டேஞ்சரஸ் பர்சன் டு ஆல்’. இந்த செய்தியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இளைஞர்களான உங்களுக்கு இருக்கிறது. பொியார், அண்ணா, கலைஞரை படியுங்கள்” என்றார்.

தொடர்ந்து தலைமை உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது கூட தி‌.மு.க குறித்தும் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுகிறார் பிரதமர் மோடி. கலைஞர் குடும்பம் வாரிசு அரசியல் செய்வதாக பேசுகிறார் பிரதமர் மோடி, உண்மைதான்.

செயல்வீரர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த குடும்பமும் கலைஞர் குடும்பம் தான். இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று சொன்ன பிரதமர் மோடி, நாட்டின் பெயரை மட்டுமே பாரத் என மாற்றியிருக்கிறார். ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாதோ அப்படி மாநாட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடத்திருக்கிறது ஒரு கட்சி. அந்த மாநாட்டில் கட்சி கொள்கைகள் குறித்து எதுவும் பேசவில்லை. புளி சோறு மாநாடாக விமர்சிக்கப்பட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/4YUzeog