தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியலாளப் பெண் ஒருவர் குழந்தையுடன் சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இந்தியில் பேசியிருக்கிறார். அதற்கு அந்தப் பெண், “புரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்” என பதிலளித்திருக்கிறார். உடனே, அந்தப் பாதுகாப்புப் படை வீரர், ‘இந்தியாவில் வாழ்ந்துக்கொண்டு இந்தி தெரியாதா… இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி.

கோவா விமான நிலையம்

வேண்டுமானால் கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. அப்படியென்றால் உங்களுக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில், அந்த பாதுகாப்புப் படை அதிகாரியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். “தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க இளைஞர் அணித் தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “கோவா விமான நிலையத்தில் மத்தியத் தொழிற்துறைப் பாதுகாப்பு வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி – மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர – இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல. பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/LMPKuBR